உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




106

அப்பாத்துரையம் 40

-

சூரியன் ஒரு பொன் தேர் என்று பண்டைக் கிரேக்கர்கள் கருதினார்கள். அது நாள்தோறும் கிழக்கிலிருந்து புறப்பட்டு, மேற்குநோக்கி வானவீதியில் பாய்ந்து செல்லும் என்றும், அப்பாலோ அதை ஓட்டிச் செல்கிறான் என்றும் அவர்கள் கருதினார்கள். எனவே, அப்பாலோவை அவர்கள் பரிதிக்கடவுள் என்றே குறிப்பிடத் துவங்கினார்கள். அவன் இசைக்குத் தெய்வமாகவும் கருதப்பட்டான். காலையில் கதிரவன் ஒளி பட்டதுமே பறவைகள் தங்கள் இன்குரலால் இசைபாடுவதைப் பார்த்த மக்கள் அவ்வாறு குறிப்பிட்டார்கள். அப்பாலோ மருந்துகளுக்குச் சக்தி அளிக்கும் தெய்வமாகவும் கருதப்பட்டான். பகலவனின் வெளிச்சத்தால் எத்தனையோ நோய்கள் தீருவதால் அவர்கள் அவ்வாறு நினைத்தார்கள். அவனே எதிர்கால நிகழ்ச்சி உரைக்கும் நிமித்திகக் கடவுளாகவும் கருதப்பட்டான்.

ஆனால், அப்பாலோ பெரும்பாலும் பரிதிக்கடவுள் என்றே சிறப்பாகக் குறிப்பிடப்பட்டான். அவன் தாவிக் குதிக்கும் தன் குதிரைகளை நீலவானில் விரைந்து செலுத்திக்கொண்டு வருவான் என்றும், இல்லையேல், தன் பொன் யாழில் இன்னிசை மீட்டிக்கொண்டு வயல்களிலும் காடுகளிலும் சுற்றித் திரிவான் என்றும் அவர்கள் நினைத்தார்கள்.

ஒரு காலத்தில் ஊருக்கெல்லாம் துன்பம் விளைத்து வந்த பைதான் என்னும் மலைப்பாம்பைக் கொன்று அவன் மக்கள் துயர் தீர்த்தான். மக்களும் அதற்கு நன்றி பாராட்டி, அப்பாலோவுக்கு ஒரு கோயில் எழுப்பினார்கள்.

அப்பாலோ பிற கடவுளர் எல்லாரைக் காட்டிலும் தலைசிறந்த பேறுகளைப் பெற்றிருந்தும், அவனையும் விதி சில சமயங்களில் சதி செய்தது.

மலைப்பாம்பைக் கொன்றொழித்தபின் அப்பாலோ தன் வீரப் பெருமிதத்துடன் சென்று கொண்டிருக்கையில், காதல் தெய்வமான கியூப்பிட் தன் சிறிய அம்புகளை மக்கள் மீது எய்துகொண்டிருந்ததைக் கண்டான்.

"அம்புகள் மலைப்பாம்பைக் கொல்பவனுக்கல்லவா வேண்டும். மக்கள் மனதை வாட்டுவதற்கு இவ்வளவு பெரிய படை