உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

131

பல சைக்கிளப்ஸ்கள் வெளியில் வந்து நின்று, “என்ன பாலிஃவீமஸ், என்ன?” என்று கூவினர்.

66

என்னைக் கொன்று விட்டான், என்னைக் கொன்று விட்டான்!” என்று கூவினான் பாலீஃவீமஸ்.

"யார் கொன்றது, கொன்றது யார்?" என்று கடுஞ்சீற்றத் துடன் அவர்கள் கேட்டார்கள்.

"யாருமில்லை, யாருமில்லை," என்றான் பாலிஃவீமஸ்.

கொன்றது யாருமில்லை என்றால், இரவில் இப்படிக் கூவித் தங்கள் உறக்கத்தைக் கெடுப்பானேன் என்று சைக்கிளப்ஸ்கள் சலித்துக்கொண்டனர். அவன் குடித்து உளறுகிறான் என்று நினைத்து அவர்கள் தங்கள் தங்கள் குகைக்குச் சென்று விட்டார்கள்.

ஒடிஸியஸ் ‘யாருமில்லை' என்ற பெயர் கூறியதன் முழுநகைத் திறத்தைக் கிரேக்கர் அப்போதுதான் உணர்ந்தார்கள்.

பாலிஃவீமஸுக்கு இப்போது குகை திறந்திருப்பது நினைவுக்கு வந்தது. அவன் வாயிலை அடைத்து உட்கார்ந்து கொண்டான். வெளியே போகும் ஆடுகளை மட்டும் ஒவ்வொன்றாக மேயச் செல்லும்படி விட்டான்.

ஒடிஸியஸ் ஆடுகளை மூன்று மூன்றாக இணைத்து அவற்றினடியில் ஓரிரு கிரேக்கர்களைக் கட்டி அனுப்பி விட்டான். தானும் இவ்வாறே வெளியே போய் விட்டான்.

கலங்களில் ஏறியபின் கிரேக்கரால் தம் வெற்றிக் களிப்பை அடக்க முடியவில்லை. அவர்கள், “வென்றது ஒடிஸியஸடா, ஒடிஸியஸ்; யாருமில்லை என்று இனிச் சொல்லாதே,” என்று கூவினர்.

பாலிஃவீமஸ் தான் ஏமாந்ததுகண்டு பின்னும் கூக் குரலிட்டுக்கொண்டு கடற்கரைக்கு வந்து மலை போன்ற கற்களை வீசி எறிந்தான். மற்ற சைக்கிளப்ஸ்களும் இதற்குள் வந்து அரையளவு ஆழம் கடலில் இறங்கி வந்தும் கல் வீசியும் பார்த்தனர். அவர்கள் அரையளவு என்பது மூன்று நான்கு ஆள் ஆழமாதலால், கிரேக்கர் கலங்களுக்கு அவர்கள் கற்கள் மிகவும்

டையூறு விளைவித்தன. ஒன்றிரண்டு கலங்கள் கவிழ்ந்தன.