உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

135

வேண்டிவரும். உலகின் எல்லா இடர்களையும் வென்ற ஒடிஸியஸ் பெனிலோப் ஒருத்தியின் சீற்றத்துக்கு அஞ்சினான். ஆகவே, அவன் அவளை மணந்துகொள்ளப் போட்டியிடும் வீரருள் ஒருவனாய் தன் மாளிகையில் புகுந்தான்.

முதலில் அவன் மாளிகையின் வாயில்களை எல்லாம் அடைத்துவிட்டான். எல்லா வீரரும் அம்பெய்து தோற்றதும் அவன் கோடரிகளினூடாகத் தன் அம்பைச் செலுத்தினான். வீரரெல்லாம் திகைத்து நின்றபோது, அவன் அம்புகள் அவர்கள்மீது பாய்ந்தன. வெளியே கதவுகள் அடைத்திருந்ததால், அவர்கள் ஓடமுடியாமல், அடைபட்டு அம்புக்கு இரையாயினர்.

பெனிலோப் இப்போதும் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. தன் கணவனை ஒத்த ஒரு வீரன் எவனோ எங்கிருந்தோவந்து, தன் நம்பிக்கையைக் குலைத்துத் தன் கையைப் பற்றத் துணிந்துவிட்டான் என்று மட்டுமே அவள் கருதினாள். அவள் அடுப்பங்கரையில் கையாடிக்கொண்டிருந்த அகப்பைக் கோலைச் சுழற்றிக்கொண்டு ஒடிஸியஸ்மீது பாய்ந்தாள்.

ஒடிஸியஸ் தன் முழு அறிவுத்திறத்தையும் இப்போது காட்டினான். தான் ஒடிஸியஸின் தூதுவன் என்று கூறி அவள் சீற்றம் தணிந்தபின் மெல்லத் தன் நீண்ட பயணக் கதையைக் கூறித் தானே ஒடிஸியஸ் என்று அறிவித்து முடித்தான்.சீற்றம் தணிந்தும் பெனிலோப்பின் ஐயம் அகலவில்லை. அதன்பின் ஒடிஸியஸ் பெனிலோப்பைத் தான் காதலித்தநாள் முதற்கொண்டு தம்மிடையே நிகழ்ந்த ஒவ்வொரு செய்தியையும் கூறினான். இப்போது பெனிலோப் அவனை அடையாளம் கண்டு கொண்டாள். அவள் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. உலகஞ் சுற்றிய வீரனை அவனுக்காக இத்தனை நாள் ஓயாது துடிதுடித்துக் காத்திருந்த கைகள் வளைத்தணைத்துக்

கொண்டன.

ஒடிஸியஸின் வீரச்செயல்களையும் வெற்றிகளையும் கிரேக்க உலகம் பாடிப் புகழ்ந்தது.