உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுகதை விருந்து

(229

எனக்கொன்றுங் கிட்டவில்லை. இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கல் அகப்பட்டிருக்கின்றது. நான் இவர்களைப் பின் தொடர்ந்து போய் இவர்களுடன் சேர்ந்து கொள்வேன். இவர்கள் அயர்ந்து தூங்கும் போது இவர்களை வெட்டிப்போட்டு இவர்கள் வயிறுகளிலுள்ள மாணிக்கங்களைக் கவர்ந்து கொள்வேன்.”

நினைத்தவன், மூன்று நண்பர்களும் வழிக்கொண் டேகப் பார்த்து அவர்களைப் பின் தொடர்ந்தான். அவன் சில நேரத்துக்கெல்லாம் அவர்களைக் கூடி அவர்களிடஞ் சொல் கின்றான். “ஐயன்மார்களே! யான் ஒரு வழிப்போக்கன்; இந்தக் காட்டு வழியே ஒன்றியாகப் போக மனந் துணியவில்லை. நல்ல காலமாக நீங்கள் என் கண்ணுக்கு அகப்பட்டீர்கள். நான் உங்களுடன் கூடிக்கொண்டு வழி நடக்க உத்தரவு கொடுக்க வேண்டும்" தமக்கு வழித் துணை யாவான் என நினைத்து அம் மூவரும் அம் மனிதன் வேண்டுகோளுக்கிணங்கிக் கொண்டனர்.

இவர்கள் நால்வரும் மாணிக்கமலைச் சாரலைக் கடந்து ஒரு பெருங் காட்டுவழியின் பக்கத்தில் இருந்த ஓர் ஊரில் சிறிது நேரந்தங்கி இளைப்பாறி அப்பாற் சென்றனர். அவ்வூரின் கோடியில் அவ்வூராளியின் மாளிகை இருந்தது. அவன் பல பறவைகளை வேடிக்கைக்காக அம்மாளிகையில் வளர்த்து வைத்துக்கொண்டிருந்தான். அவைகளில் ஒன்று பாட்டுப் பாடிற்று. அவ்வூராளிக்குப் பறவைகள் பாட்டுக்களின் கருத்து நன்கு தெரியும். அப்பறவை பாடினதைக் கேட்டு, அவன் அவ்வழிப்போக்கர்களைக் கூவியழைத்தான். அக்கூக்குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பி வராமலிருக்க அஞ்சி மெதுவாய் நடந்துவந்து அவ்வூராளியினெதிரில் நின்றனர். அவன் அவர்களை நோக்கி, “உங்களிடம் மாணிக்கமிருக்கிறதென்று இப் பறவைபாடிச் சொல்லுகின்றது”என்று சொல்லிக்கோலொடு நின்று கொடுங்களென்றான்.அதற்கு அவர்கள் தங்களிடம் ஒன்றுமில்லையென்று வாய் குழறிச் சொன்னார்கள். அதற்கு மேல் அவன் ஆட்களைவிட்டு அவர்கள் உடைகளைச் சோதிக்கும்படி கட்டளையிட்டான். ஆட்கள் அவ்வாறு செய்தும் மாணிக்கத்தைக் கண்டார்களில்லை. ஊராளி மனக்கிலேசத் துடனே அவ் வழிப்போக்கர்களைப் போகவிட்டுவிட்டான்.

ப்