உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(228

அப்பாத்துரையம் – 40

மகன் சொல்லுகின்றான். “நான் எங்குச் செல்வது? எவ்விடஞ் சென்றாலும் கைச்செலவுக்குப் பொருள் வேண்டுமல்லவோ! ஆகையின் நாம் முதன் முதல் மாணிக்கமலைக்குச் செல்ல வேண்டும். அங்கு நமக்கு அருங்கற்கள் அகப்படும். பிறகு நம் மனப்படி நாலு திக்குஞ் சென்று, நல்ல நல்ல நாடுகளெல் லாம் பார்த்துக்கொண்டு உவப்புடன் நாள் கழிக்கலாம் வாருங்கள்”

உடனே மூவருஞ் சேர்ந்துகொண்டு நடையாக நடந்து மாணிக்கமலை அடைந்தனர். அவர்கள் நல்ல காலம் அங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மணிக்கல் அகப்பட்டது. அகப்பட்டதும் மூவருஞ் சிந்திக்கலானார்கள். “நாம் செல் வதோ காட்டு வழிகள். இவ்விலையுயர்ந்த பொருள்களை எவ்வாறு கைவிட்டுப் போகாமற் காப்பது? மறவர்களாலும், குறவர்களாலும் நமக்கு உயிர்ச்சேதம் வந்தாலும் வரு மல்லவோ" கடைசியாக வாத்திப்பிள்ளை தன்னிரு நண்பர் களையும் நோக்கி, “நான் தக்கவழி ஒன்று சொல்லுகின்றேன். இக்கற்களை நாம் விழுங்கி வயிற்றில் வைத்துக் கொள்வோம். அப்போது திருடர் பயம் ஏது?" என்றான். அவ்வாறே அம் மூவரும் அன்றிரவு உணவருந்தும்போது தத்தம் கற்களை உணவோடு உட்கொண்டுவிட்டனர்.

இஃது இவ்வாறாக, ஒரு மனிதன் பல நாட்களாக அம் மாணிக்கமலைச் சாரலில் வந்து அருங்கல் ஒன்று சம்பாதிக்க அரும்பாடு பட்டுத் திரிந்து கொண்டிருந்தான். அவன் பொல்லாத வேளை அவனுக்கு ஒரு கல்லும் அகப்பட வில்லை. இந்நிலையில் அவன் அங்கு ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான். அவனிருந்த இடத்திற்கு அருகிலேயே முன்சொன்ன மூவரும் அப்போது உணவருந் தினர். ஆனால், இவர்கள் அங்கு அம்மனிதனிருப்பை அறிந்தார்களில்லை. ஆனால், அவனோ இவர்கள் செய்கையை யெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமலிருந்தான். மூவரும் உண்டி முடித்து உவப்போடு உட்கார்ந்து, பிறகு நடக்க வேண்டியவைகளைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கையில் அம்மனிதன் நினைக்கின்றான்; "யான் நாட்கள் பலவாக மாணிக்கங் காண இம் மலையைச்சுற்றிச் சுற்றித் தேடிக்கொண்டிருக்கின்றேன்.நான் கொடுத்து வைக்காமையால்