உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1. தீமையில் நன்மை

ஒரு காலத்தில் ஓரரச மகன் இருந்தான். ஒரு செட்டிப் பிள்ளையும், ஒரு வாத்திப் பிள்ளையும் அவனுக்கு நண்பர் களாக இருந்தார்கள். இவர்கள் மூவரும் ஆடிப் பாடித் திரிந்து, மன மகிழ்ச்சியுடன் நாட்கழித்துக்கொண்டு வந்தனர். அந்நண்பர்கள் தங்கள் வீடுகளில் எது எக்கேடு கெட்டாலுங் கவனிக்கிறதே இல்லை. நாட்டுக் காரியங்களில் நாட்டம் வைப்பதில்லையென்று அரசனும், கொடுக்கல் வாங்கல் வேலைகளிற் குறிக்கோள் கொள்வதில்லையென்று செட்டி யும், நூல்களைப் படிப்பதில்லையென்று வாத்தியாரும் தங்கள் தங்கள் பிள்ளைகளைத் திட்டிப் பேசிக்கொண்டிருந்தார்கள். மகிழ்ச்சி விளையாட்டுக்களில் மனம் பதிந்திருந்தமையால், நண்பர்கள் மூவரும் தகப்பன்மார் புத்திமதிகள் மனத்தின்கண் படாமலே சில நாட்கள் கழிந்தன. பிறகு வரவர அரசன் முதலானோர் தங்கள் பிள்ளைகளைக் கடுகடுத்துப் பேசத் தொடங்கினர். இதனைப்பற்றி மூவரும் மனத்தாங்கல் கொண்டிருந்தனர்.

இவ்வாறு இன்னுஞ் சில நாட்கள் செல்லவே, ஒரு நாள் அரசச்செல்வன் மற்றிரண்டு நண்பர்களையும் நோக்கி, 'நண்பர்களே! இவ்வாறு மனத் துன்பத்துடன் இங்கிருந்து கொண்டிருக்க என்மனம் டங்கொடுக்கவில்லை. நம்

மூவருடைய மனத் துயர்கள் ஒருவகைப்பட்டவைகளாகவே இருக்கின்றமையால் நாமெல்லோரும் இவ்விடத்தைவிட்டு வெளியேறிப் போய்விடுவதே தக்கதென்று என் மனத்திற் படுகின்றது. மேலும் மனவன்மையும், அறிவும், அண்டன்மை யும் வெளிநாட்டு நடமாட்டத்திலேதான் வெளிப்பட்டுக் காணப்படும்” என்றான். அரசமகன் சொல்லுக்கு மற்ற இருவரும் உடனே இசைந்து கொண்டனர். எனினும் செட்டி