உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுகதை விருந்து

(245

விலைக்கு வாங்கியதை நானே கண்டேன். சில பழங்களை நானே வாங்கியும் கொடுத்தேன்.”என்றாள்.

அப்போதுதான் பிள்ளைகள் அவள் பக்கம் திரும்பி அவள் முன் தான் கண்ட மாதே என்று உணர்ந்தனர். வேலு ஓடிச்சென்று அவள் ஆடையைப் பற்றிக்கொண்டு, "மாமி, மாமி” என்றான். அவள் வேலுவைத் தோளில் தூக்கி மிதிவண்டி மீது வைத்துக்கொண்டு, “வாருங்கள், உங்களுக்குத் தின்பண்டம் தருகிறேன்; களைப்பாறிச் செல்லலாம்” என்றாள்.

து

வேலைக்காரன் தலைவியின் செயல்கண்டு, நடை தோற்றம் யாவையும் மாற்றிக்கொண்டு, சேந்தனை வணங்கி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பிள்ளைகளுடன் நடந்து பின் சென்றான்.

இரண்டுமணி நேரத்துக்குள் அம் மாதுக்கும் கதி ரொளிக்கும் இணைபிரியா நட்புண்டாயிற்று. பலநாள் பழகியவர்கள்போல இருவரும் பழங்கதைகள் புதுக்கதைகள் யாவற்றையும் பேசிப் பேசிக் களித்தனர். அப்போது கதிரொளி, மறுநாள் தாங்கள் அவ்விடம் விட்டுச் செல்ல வேண்டியிருப்பதைத் தெரிவித்தாள். அதன் காரணத்தை அறிந்த உடனே அம் மாது, “இவ்வளவுதானே, பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோலாயிற்று. எங்கள் வீட்டுப் பின் புற மாளிகைக்கு முன்பணம் தந்த மனிதர் தம் உறவினர் உடல் நலிவால் வரல் முடியாதென்றும், முன்பணத்தைக்கூடத் தாம் பொருட்படுத்த வில்லையென்றும், வீட்டை வேறு குடிக்கூலிக்கு விட்டுவிடலாம் என்றும் தந்தியடித்திருந்தனர். முன்பணத்தை இப்போதுதான் அனுப்பிவிட்டு வருகிறேன். நீங்கள் இங்கே வந்து எத்தனைநாள் வேண்டுமானாலும் இருக்கலாம்” என்றாள்.

வழியிடறி விழுந்தவனுக்குப் புதையல் பட்டது போலாயிற்று பிள்ளைகளுக்கு. அவர்கள் குற்றால வாழ்வே குறைவற்ற வாழ்வாக வாழ்ந்தனர்.