உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




270

அப்பாத்துரையம் – 40

அதில் சிறு தொகை எடுத்து, அதன் புதுத் தொழில் தொடங்கினான். தொகையுடன் தொகை எளிதில் பயன் படுத்தப்பட்டது. தொழில் விரைந்து வளமடைந்தது. மும்முடிக்கு அவன் பல பரிசுகளும், மறை உதவிகளும் செய்தான். மும்முடியின் நட்பு இதனால் வளர்ந்து வேரூன்றிற்று. ஊரில் குறளிமாறன் மதிப்பும் முன்பு கோமாறனுக்கு இருந்த மதிப்பை விடப் பன்மடங்காக வளர்ந்தோங்கிற்று.

கோமாறன் வாழ்வின் மாறுதல் கண்டு எல்லாரும் மகிழ்ந்தார்கள். இருவரும் வியப்படையவில்லை. ஏனெனில், அதன் ஒவ்வொரு பகுதியும் இயல்பாகவே தோன்றிற்று. கோமாறன் குறளிமாறனாக மாறியிருந்ததை மட்டும் யாரும் கவனிக்க முடியவில்லை. ஆனால், உண்மை நிலையை அறியாமலே, மாறுதல் கண்டு மறுகிய இரண்டு உள்ளங்கள் இருந்தன. ஒன்று கோமாறன் தாய் பூமாரி; மற்றது அவன் மனைவி

குணமாலை.

மைந்தன் தன்னுடன் முன்பு பழகியது போல இப்போது பழகவில்லை என்பதைப் பூமாரி கண்டாள். ஆனால், இது புதுச்செல்வத்தின் பயன் என்று மட்டுமே அவள் எண்ணி னாள். இது அவளுக்கு வருத்தத்தை அளித்தது. ஆனால், மகன் மீது வெறுப்புக்கொள்ள இதில் எதுவும் இல்லை.

புது மாறுதலைக் கண்டு பூமாரியைவிட மறுகியவள் குணமாலையே. பிரிந்து செல்லும்போது கணவனுக்கு இருந்த ஆர்வம், திரும்பி வந்தபோது ஏன் இல்லை என்று அவள் தனக் குள்ளேயே ஓயாது கேட்டுக்கொண்டாள். இந்தக் கேள்விக்குச் சரியான விளக்கம் ஒன்றுமே ஏற்படவில்லை. உண்மையில் அது ஒரு புதிராகவே வளர்ந்துவந்தது. ஏனெனில், கணவனின் மாறுதலின் காரணமறியும் வரை அந்தக் காரிகை அவனிடம் நெருங்கிப் பேசாமல் இருந்தாள். குறளிமாறன் அவள் பேசாதவரை, தானாகப் பேசி மாட்டிக் கொள்ளவும் விரும்பவில்லை.

இந்நிலையில் கோமாறன் தாயுடன் குறளி மாறன் தொலை உறவினன் போலவே நடந்தான். ஆனால், கோமாறன் மனைவியுடனோ, இந்த அளவு கூடப் பழகவில்லை. அவன் அவளை யாரோ எவரோபோல் நடத்தினான். கற்புடைய