உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

13

ஆரியச் சொற்கள் காணப்படுத்ல என்னையெனின்;- ஆரிய மக்கள் தமிழரோடு அக்காலத்துத்தான் விரவுதற்குப் புகுந்தனராகலின் அச் சொற்கள் ஒரோவொன்று சுத்தச் செந்தமிழ் நூல்களினுங் காணப்படுவனவாயின. காணப் படினும், நூற்றுக்கு ஒன்றல்லது இரண்டு விழுக்காடு மிக அருகிவந்ததே யன்றிப் பிற்றை ஞான்றை நூல்களிற்போலப் பெருகிய வரவினவாய் அவை வந்ததில்லை யென்க. இனி, அள், கள், கல், கு, சா, பண், பக், மின், வள், நல், மு முதலான சுத்தச் செந்தமிழ்ப் பகுதிகளிற் பிறந்த ஆணி, அடவி, கடு, கலா, குடி, குண்டம், கூனி, குளம், கோட்டை, சவம், சாயா, பட்டினம், பாகம், மீனம், வளையம், நாரங்கம், முகம் முதலான தமிழ்ச்சொற்கள் ஆரிய மொழியில் வழங்குதல் உய்த்துணரற் பாலதென்க. இவற்றின் விரிவெல்லாம் முன் ஞானசாகரத்திற் காட்டினாம். இன்னுமிதன் பெற்றி யாமெழுதிய முல்லைப் பாட்டாராய்ச்சியினும் நன்கு விளங்கம். அது நிற்க.

னித் தமிழ் வடமொழியின் வேறாயதோர் தனி மொழியாயினும் அஃது ஆரியம்போல் அத்துணைப் பழமையுடையதன்று, நிரம்பவும் புதிதாய்த் தோன்றிய தொன்றாம் என்றுரைப்பார் உரை பொருந்தாமையும் அம்மொழி யாராய்ச்சியான் ஒரு சிறிது காட்டுதும். தமிழில் ஒருபொருளை யுணர்த்துதற்குப் பல பொருள் நிற்றல் பிங்கலந்தை முதலான நிகண்டு நூல்கற்ற சிறு மகாரும் நன்குணர்வர். ஒரு பொருளை யுணர்த்துதற்கு ஒரு சொல்லே சாலுமாகவும் அங்ஙனம் பல சொற்கள் வேண்டப்படுவ தென்னையென நுணுகியாராயின் அதனுண்மை இனிது புலப்படா நிற்கும். எடுத்துக்காட்டுமிடத்துக், குணத்தினை யுணர்த்த உக சொற்களும், உயர் வினை யுணர்த்த கஎ சொற்களும், வலிவினை யுணர்த்த ஙச சாற்களும், அச்சத்தினை யுணர்த்த ககூ சொற்களும், மலையினை யுணர்த்த அ சொற்களும் வருகின்றன. பிறவும் இவ்வாறே. ஒரே காலத்து இச் சொற்களெல்லாம் ஒருங்கு பிறந்தனவாகா. ஒவ்வோர் சொல்லும் ஒவ்வோர் காலத்துத் தோன்றிச் சிலகாலமெல்லாம் நடைபெற்று அச்சொல் வழங்கிய மக்களோடு அதுவுமொழிய, அவர்க்குப் பின்னெழும் மக்களோடு பிற புதிய சொற்கள் தோன்றி அவையுமவ்வாறே நடைபெற்றொழிய இங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/38&oldid=1591701" இலிருந்து மீள்விக்கப்பட்டது