உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

17

பழையமொழி என்னும் ஞானசாகர உரையுட் காட்டினாம். அது நிற்க.

இனித், தமிழ் லக்கண இலக்கிய விரிவானும் மிகப்பழைய தொன்றென்பது காட்டப்படும். இப்போது தமிழில் வழங்கும் இலக்கண நூல்களுள் மிகப்பழையது தொல்காப்பியம் ஒன்றேயாம். குறைபாடின்றிப் பாகுபாடு நனிதெரித்து எழுதப்படும் இலக்கண நூல் தமக்குடய மொழிகளெல்லாம் மிகச் சீர்திருத்தமுற்று நாகரிகம் நிரம்பிய மொழிகளாகுமென்று அறிவுடையோர் ஒருப்பட்டுக் கூறுகின்றார். ஆங்கிலமொழி இஞ்ஞான்று எவ்வளவோ சீர்திருத்தம் அடைந்தும் அதன்கண் உள்ள இலக்கண நூல்கள் ஒன்றாயினும் குறைபாடின்றி எழுதப்படவில்லை. தமிழோடு னமுடை ய ய தெலுங்கு மலையாளம் கன்ன ப ம் முதலான மொழிகள் பல நூற்றாண்டுகளாகச் சீர்திருத்தஞ் செயப்பட்டு வந்தும், அவற்றின் கண்ணும் இதுகாறும் இலக்கணநூல் ஒன்றேனுஞ் செவ்வையாக எழுதப்படவில்லை. இலக்கணநூல் சவ்வையாக இயற்றப்பட்ட மொழிகள் இவ்வுலகில் எத்தனையுள்ளன வென்று எண்ணிப்பார்க்கும் வழி அவை மிகச் சிலவே உளவாதல் எல்லாரானும் எளிதிலே யறியப்படும். அவற்றுள், தமிழ், வடமொழி என்னும் இரு மொழிகளினும் எழுதப்பட்ட இலக்கணநூல்களின் பெருமையும், நுணுக்கமும், நிறைவும் ஆராயுந் தோறும் பேரின்பத்தை விளைக்கின்றன. ஒரு மொழியைச் சீர்திருத்தம் பண்ணுவது ஒருவரிருவரான் முடியும் எளியகாரியமன்று. சுழன்று செல்லும் புயற் காற்றினையும், அணைகடந்து பெருகும் வெள்ளத்தினையும் இடைமறித்து நிறுத்தினும் நிறுத்தலாகும்; ஒரு மொழியின் விரைந்த செலவை அடக்கியாளுதல் யார்க்கும் முடியாத தொன்றாம். வேத காலத்திலே எழுதப்பட்ட ஆரிய மொழி காவிய காலத்தில் எவ்வளவோ மாறுதலடைந்தது. போவுல்ப் கேடிமான் காலத்தில் நடைபெற்ற ஆங்கிலமொழி சாசர் காலத்திலும், சாசர் காலத்திய மொழி செகப்பிரியர் காலத்திலும், செகப்பிரியர் காலத்திய மொழி டெனிசன் காலத்திலும் எத்தனை எத்தனையோ மாறுதல் அடைந்தன. இங்ஙனங் காலங்கடோறும் ஒரு மொழியின் முன்னுருவந் திரிபெய்தி ரு வருமாயின் அம் மொழியின் ஒழுங்கை யறிந்து இலக்கண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/42&oldid=1591705" இலிருந்து மீள்விக்கப்பட்டது