உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

23

அதற்குரை கண்ட இளம்பூரணர் முதலான உரையாசிரியர் உரையானும் நன்குணரப்படும். இவ் யாறுகளும் இவற்றைச் சூழ்ந்த நிலங்களும் கடல் கொள்ளப்பட்டது இற்றைக்கு நாலாயிரத்து முந்நூறு ஆண்டுகளின் முன்னென்று இலங்கைப் பௌத்த வமிசாவளியிலே குறிக்கப்பட்டிருக்கின்றது. இங்ஙனங் குறிக்கப்பட்ட காலமும், விவிலிய நூலில் குறிக்கப்பட்ட நோவா என்பவர் காலமும் மிகவும் ஒத்திருக்கின்றன. எனவே, தொல்காப்பியனார் நாலாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்தா ரென்று துணிந்து கூறுவாம்.

இனி, இத்துணைப் பழை காலத்தே எழுதப்பட்ட தொல்காப்பியம் என்னும் தமிழ்க் களஞ்சியத்தில் தொகுக்கப் பட்டுள்ள பொருள் நுட்பங்கள் ஈண்டு முற்றவும் எடுத்துக காட்டல் ஏலாமையின், ஒவ்வோரதிகாரத்திலும் ஒன்றிரண்டு எடுத்துரைப்பாம். எழுத்ததிகாரத்தின் முதலிலேயே அவ்வாசிரியர் தமிழ் ஒலி எழுத்துக்களை முறையே நிறுத்திக் கூறிய திறம் பெரிதும் வியக்கற் பாலதாம். மூடி இருந்த வாயைத் திறந்த மாத்திரையானே அகர ஒலி இயற்கையாய்த் தோன்று தலின் அதனை முன்னும், அதன்பின் இகரம் நாவாற் பிறத்தலின் அதனைப் பின்னும், அதன்பின் அவ்வோசை இதழ் வழியே உகரமாய்ச் சென்று அழிதலின் அதனை அதன் பின்னுமாக நிறுத்தியருளினார். முற்பிறக்கும் ஓசை யெல்லாம் குறுகி யிருக்குமாதலானும், அவ்வோசை பிற்கணத்திற் றொடர்ப்பட்டு நீளுவதே நெடிலாமாதலானும் முன்னே அ, இ, உ என்னுங் குற்றெழுத்துக்களையும், அவற்றின் நீட்டமான ஆ, ஈ, ஊ என்பவற்றைப் பின்னுமாக வைத்தார். ஏனைய ஓசைகளின் முறையும் ஈண்டுரைப்பிற் பெருகும். அவையெல்லாம் ஆசிரியர் நச்சினார்க்கினிய ருரையிற் காண்க. அற்றேல் அங்ஙனமாக,

வெழுத்துமுறை வடமொழி முதலான பிறமொழிகளினும் காணப்படுவதாக இதனைத் தமிழுக்கே வரைந்து சொல்லிய தென்னையெயனின்; - வடமொழியை ஒழித்து ஒழிந்த இந்திய மொழிகளிலெல்லாம் காணப்படும் இம்முறை, தமிழ் ஆரியத்தின் முறைகண்டு செய்து கொள்ளப் பட்டதாகலின் அஃதீண்டு ஆராயற்பாற்றன்று. மற்று வடமொழியில்இம்முறை பண்டுதொட்டுக் காணப்படுதலின் அஃதொன்றே ஈண்டாராயற் பாலதாம். தமிழர் செய்த முறையைக் கண்டு ஆரியர் தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/48&oldid=1591711" இலிருந்து மீள்விக்கப்பட்டது