உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

31

தென் அசோகலிபி இந்தியாவிலேயே பிறந்த எழுத்துக்களாகு மென்பது நன்கு பெறப்படும். என்னை? புறநாட்டிலிருந்து வந்த எழுத்துக்கள் இந்தியாவிலுள்ள இந்தியமக்கள் எல்லார்க்கும் விளங்காமையின் அவை அப் புறநாட்டை யடுத்த இந்திய எல்லையில் மட்டும் பயன்படுத்தப்பட்டன; உள்நாட் டழுத்துக்கள் யார்க்கும் புலப்படுமாதலால் அவை இந்தியா வெங்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இங்ஙனந், தென் அசோகலிபி இந்தியாவிற்கே உரிய தென்பதனை இவ்வியல்பு முற்றவும் ஆராய்ந்த தாமஸ், கன்னிங்காம் என்னும் கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞர் இருவரும் நன்கு விளக்கினார்.

இனித், தென் அசோகலிபி என்பது தமிழ் வட்டெழுத்துக் களின் திரிபேயன்றி வேறென்று கூறுதல் ஆகாமையால், அது தமிழர்க்கே உரிய எழுத்தாமென்று நாட்டப்படும். வட அசோகலிபியும் தமிழர் வழியாய்ப் பெறப்பட்ட பினீசியர் எழுத்தேயல்லது பிறிதில்லை. இவ்வவாறு எழுத்துக்களின் இருவகைப் பாகுபாடும் பொருந்தக் காட்டப்பட்டமையால் இந்தியாவில் வழங்கப்படும் எழுத்துப் பினீசியரிடமிருந்து போந்ததென்று உரைப்பார் உரையும், அற்றன்று அஃது இந்தியாவிலேயே பிறந்து வழங்குகின்றதென் றுரைப்பார் உரையும் தம்முள் முரணாமை காண்க. பினீசியரிடமிருந்து போந்ததெல்லாம் இந்திய வடமேற்கெல்லையில் அருகி வழங்கும் வட அசோகலிபியே யாகுமென்பதூஉம், இந்தியா விலேயே தோன்றிப் பண்டுதொட்டு நடைபெறுவது திரிபான தென்னசோகலிபியே யாகுமென்பதூஉம் பாகுபடுத்து விளங்க உணர்தல் வரலாற்று நூல் வல்லார்க்கு இன்றியமையாத கடமையாம். இவ்வுண்மை தேறாது அவையிரண்டினையும் ஒன்றெனக் கூறி முடிபுரைத்தல் ஒரு சிறிதும் பொருந்தாதென்க.

தமிழவட்டெழுத்தின்

இனி, ஆசிரியர் தொல்காப்பியனார் சொல்லதிகார முதலிலேயே உலகியற் பொருள்களை உயர்திணை யென்றும் அஃறிணை யென்றும் பகுத்தோதினார். சுவை, ஒளி, ஊ று, ஓசை, நாற்றம் என்னும் ஐம்பொறியுணர்வோடு இவற்றைப் பகுத்துணர்கின்ற மனவறிவும் உடைய உயிர்களெல்லாம் மக்களெனப்படுவர் என்றும், இம்மக்களே ம்மக்களே உயர்திணை யாவரென்றும், ஐம்பொறி உணர்வு மட்டும் உடைய விலங்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/56&oldid=1591719" இலிருந்து மீள்விக்கப்பட்டது