உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

33

ச்

என்பதுஅலிப்பாலாம். நண்பர்காள்! ஈதென்ன புதுமை பாருங்கள்! சடப்பொருளான இவையெல்லாம் ஆண் பெண் எனக் கூறினால் யாருக்குத்தான் நகை விளையாது. இவ்வாறு சொற்களை ஒரு வரன்முறையுமின்றித் தோன்றியவாறு அண் பண் எனக் கூறி, அவைதம்மைச் சொற்றொடர்களில் இயைத்துக் கூறுங்கால் ஆண்பெயர்க்கேற்ப ஆண் வினையும் பண்பெயர்க்கேற்பப் பெண்வினையும் கூட்டி யுரைக்கவென விதித்தால் இவை தம்மை அறிவுடையோர் கற்க முந்துவரா? வேறு மொழி தெரிதற்கு வழியின்றி ஆரியத்திற் பிறந்து இடர்ப்படுவாரே அதனைக் கற்றற்கு உரியார். பொருள் வகையால் ஈது உயர்திணை, ஈது அஃறிணை யென்று வகுத்தால் பொருட்கேற்பச் சொற்களை வழங்குதலில் யார்க்கும் டர்ப்பாடு தோன்றாது. பொருள் வகையால் அஃறிணை யென்றே உலகத்திற்கு ஒப்பமுடிந்த ஒரு சொல்லை ஒருகால் ஆணாகவும் ஒருகாற் பெண்ணாகவும் ஒருகால் அலியாகவும் கூறல் வேண்டுமென ஒருமுறையுமின்றி விதித்தால், இச் சொற்களை ஆராய்ந்து இவை ஆண், இவை பெண்,இவை அலி என உறுதி செய்தலிலேயே மாணாக்கர்க்கு வாணாள் கழியும். இனி, இவற்றாற் பெறப்படும் பொருளை யுணர்ந்து அதனை உரிமை கோடற்கு வாணாள் எங்கே உளது? சில வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினரான மக்கள் தம்முயிர்க் குறுதிபயக்கும் உண்மைப் பொருளை உணர்வதற்கு ஒரு கருவியாயமைந்த மொழி கற்றற்கும் பயன்படுத்தற்கும் எளிதாக இருத்தல் வேண்டுமேயல்லது, கடின சொல்லுடைத்தாதல் பயனின்றாம். கருவியே பெரிதிடர் பயப்பதாயின் அதனாற் பெறப்படு பொருள் பயன்தருவ தியாண்டுமில்லை யென்க. இத்துணைக் கடினச் செவ்வி யுடைமையினாலன்றோ வடமொழி உலக வழக்கின்றி இறந்தொழிந்தது. திருஞானசம் பந்தப் பெருமான் முதலான அருட்டிருவாளரும் முழு முதற்கடவுளை வழிபட்டுய் தற்குரிய எளிதான நெறியைச் செந்தமிழ்த் திருப்பாட்டுக்களிலே அருளிச் செய்வாராயினர். இப்பெற்றி இனிது தேர்ந்தே,

6

“கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந்தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/58&oldid=1591721" இலிருந்து மீள்விக்கப்பட்டது