உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

37

ஆரியர் ஒளியுடைப் பொருளையும் அவற்றோடு தொடர் புடையவற்றையும் தெய்வங்களாக வழிபட்டு வந்தனர். இதற்குத் 'தேவ' என்னுஞ் சொல்லே சான்றாம்; இச்சொல் ‘ஒளி’ என்று பொருள்படும் 'திவ்' என்னும் வேர்ப்பொரு ளினடியாகப் பிறந்ததாகும். ஆகவே, ஒளியுற்று விளங்கும் விண்ணையும், வான்மீன்களையும், கதிரவனையும், விடியற் காலத்தையும், நண்பகற் பொழுதையும், பிறவற்றையுந் தெய்வங் களாகத் துணிந்து வழிபடுவாராயினர். இன்னுந் தேவர் களெல்லாம் வான். நிலன் என்னும் இரண்டின் பிள்ளை களென்றும் ஆண்டாண்டு அந் நூலிற் சொல்லப்பட்டனர். ‘சோம’ என்னும் ஒரு வகைப் பூண்டை நசுக்கிப் பிழிந்தெடுத்த இரசம் மதுக்களிப்பைத் தருவதெனவும்; இச் சோமரசமே வான், நிலன், நெருப்பு, கதிரவன், இந்திரன், திருமால் என்னுந் தெய்வங்களை யெல்லாந் தோற்றுவித்த தெனவும் ஒரு சில டங்களில் இருக்கு வேதங் கூறுகின்றது. வேறு சில இடங்களில் சாவித்திரியும், நெருப்பும் தேவர்கட்கு இறப்பில்லா வரம் அருளிச் செய்தனர் என்கின்றது. மற்றுஞ் சில இடங்களில் எல்லாத் தேவர்களும் ஒரே வகையான ஆற்றலுடையரென் றுரைத்துப் போய்ப் பின் நெருப்பு, இந்திரன், கதிரவன் எனும் மூவரே மற்றை எல்லாரினுஞ் சிறந்தோராவ ரென்கின்றது. இன்னும் இவரைத் தவிரத் தயஸ், பிருதிவி, அதிதி, ஆதித்யர், வருணன், பர்ஜன்யன், வாயு, மருத்துக்கள், மித்திரன், பூஷன், ஷஸ், அசுவினிகள், த்வஸ்திரி, ரிபுக்கள், விசுவகர்மன், ப்ரஜாபதி, ப்ருகஸ்பதி, வாக், சோம, ருத்ர, யமன் விசுவ தேவர்கள், பித்ருக்கள் முதலாகத் தேவர் பலப்பலர் கூறப்படுகின்றனர். விஷ்ணு என்று சொல்லப்பட்ட தெய்வம் திருமால் அன்று. சூரியனே காலை, நண்பகல், பிற்பகல் என்னு முப்பொழுதினும் வான் கடந்து செல்லு நிலையில் இங்கே விஷ்ணு வென்னும் பெயரோடு பொலிகின்றான் என்று சொல்லப்பட்டிருக்கின்றத. உருத்திரன் என்று சொல்லப்பட் தெய்வம் சிவபிரான் அன்று; சூறாவளிக்குத் தெய்வமே உருத்திரன் என்று ஆண்டுச் சொல்லப்பட்டிருக்கின்றது. ருத்ரன்' என்னுஞ் சொல்லுக்கு வேர்ப்பொருள் ‘முழக்கமிடு வோன்' 'ஊளையிடுவோன்' என்பனவாம். இவ்வேற்றுமை தெரியாதார் உருத்திரனுஞ் சிவனும் ஒருவரேயெனத் தமக்குத்தோன்றியவாறே மொழிவர். 'சிவம்' என்பது கந்தழி

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/62&oldid=1591725" இலிருந்து மீள்விக்கப்பட்டது