உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

49

காணும் மனவறிவும் ஒருங்குகெழுமிய ஆறறிவுயிர்களும், என ஆறு பெரும்பகுப்பில் எல்லா எல்லா உயிர்களையும் அடக்கி, அவற்றிற்கு ஒவ்வொரு பகுப்பிலிருந்தும் ஒருசில உயிர்களையும், அவற்றின் அறிவியக்கத்தையும் எடுத்துக்காட்டியிருக்கினறார் ஆசிரியர்.’ இவ்வாறாக உயிர்களெல்லாவற்றையும், அவ்வவற்றின்கட் காணப்படும் அறிவின் ஏற்றத்தாழ்வு கண்டு, ஆறு வகையில் அடக்கிக்காட்டிய மிகப் பழைய நூல் தமிழ் மொழியிலுள்ள தொல்காப்பியத்தைத் தவிர, வேறெந்தப் பழைய மொழியிலும் எந்தப் பழைய நூலும் இல்லாமை கருத்திற் பதிக்கற்பாற்று. இதுகொண்டு,பழைய தமிழாசிரியரின் நுட்ப ஆராய்ச்சியறிவின் மாட்சி தெற்றென விளங்காநிற்கும்.

L

இனி, இங்ஙனம் பகுக்கப்பட்ட அறுவகை உயிர்களில், மனவறிவுடன் ஆறறிவுகூடிய மக்களே உயர்ந்த பிறப்பினர். அதனால், ஆசிரியர் தொல்காப்பியனார் மக்களை ‘உயர்திணை' என்றும், மக்கள் அல்லாத ஏனை ஐந்தறிவுக்குட்பட்ட உயிர்களை ‘அஃறிணை' என்றும் வழங்கினார்.2

இனித், தொடுதலுணர்ச்சி ஒன்றேயுடைய புல்லும் மரனுமே முதன்முதற் றோன்றிய உயிர்களாகும். இந்நிலவுலகத்தின் மேற்பரப்பெல்லாங் கோடிக்கணக்கான ஆண்டுகளாகப் பனிப்பாறைகளால் மூடப்பட்டிருந்தன. அப் பனிப்பாறைகள் பகலவன் வெப்பத்தால் உருகிக் கரையக் கரைய, நீர்பெருகிப் பள்ளத்தாக்கான L ங்களில் நிரம்பிக்கொண்டு பரம்பவே, ஆறும் ஏரியும் சிறுகடல் பெருங்கடல்களுமாகிய நீர்நிலைகள் தோன்றலாயின.

பின்னர், இந் நீர்நிலைகளின் அடிப்படையில் ஓரறிவுயிர் களிற் கடைப்படி யினவாகிய நீர்ப்பூண்டுகளும், ஈரறிவுயிர் களாகிய நத்தை, சங்கு, இப்பி, கிளிஞ்சில் முதலியனவும், மூவறிவினதாகிய அட்டையும், நான் கறிவினதாகிய நண்டும், ஐயறிவினவாகிய மீன்களும் பிற் பிற்காலங்களிற் றோன்றுவ

வாயின.

நீரின்கட்டோன்றிய நிர்ப்பூண்டுகள் காலஞ் செல்லச் செல்ல நிலத்தின்மேல் இவர்ந்து வளர, அவற்றையடுத்து வான்அளாவிய பரிய பரிய மரங்கள் தோன்றலும், அவை அடர்ந்த காடுகள் பல ஆங்காங்கு இம்மண்மிசைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/74&oldid=1591738" இலிருந்து மீள்விக்கப்பட்டது