உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

❖ மறைமலையம் - 29 -

பொலிவவாயின. இத்தகைய இத்தகைய காடுகளிற் பல பல்லாயிர ஆண்டுகளுக்குப்பின் மடிந்து நிலத்தின்கட் புதைந்து போகவே, பட்டுப்போன அவைகளின் மரங்கள் பல நூறாண்டுகளுக்குப் பின் கரிகளாக உருமாறின; அங்ஙனம் மாறிய கரிகளே, இப்போது நிலத்தை அகழ்ந்த சுரங்கங்களிலிருந்தும் மிகுதியாய் எடுக்கப்பட்டு, நீராவி வண்டிகளையும், நீராவிக் கப்பல்களையும் விரைவாகச் செலுத்துதற்குப் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன.

இனி, நிலத்தின்கண் இயங்கும் உயிர்களில் இருப்பன, ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவனவாகிய எல்லா உயிர்களும் முதன்முதல் நீரின் கட்டோன்றிப் பிற்காலங் களிற்றாம் நிலத்தின்மேல் ஏறிவந்து உயிர்வாழப்பெற்றன. இதற்குச் சான்றாக நீர்க்கோழியையும் நீராமையையும் உற்றுப் பார்மின்கள்! நீர்க்கோழி நீருள் அமிழ்ந்தி வாழவும் வல்லது, நிலத்தின் மேல் இயங்கவும் வல்லது, வானிற் பறந்து செல்லவும் வல்லது. மற்று, நீராமை நீரில் நீந்தி உயிர்காவழ்தற்குத் துணைசெய்யும் செட்டைகள் வாய்ந்ததாயிருத்தல் போலவே, நில ஆமை நிலத்தின்மேல் நடமாடுதற் கேற்ற அடிகளுடன் கூடிய கால்கள் வாய்த்திருத்தல் அறியற்பாலது. இன்னும் நிலத்தின்கண் உலவும் நாய், குதிரை, யான, குரங்கு முதலான விலங்குகளோ டொப்ப, நீர்நாய், நீர்க்குதிரை, நீர்யானை, நீர்க்குரங்கு, முதலான விலங்குகள் கடலின்கண் உலவா நிற்றலைக், கண்காட்சி நிலையங்களில் அவைதம்மிற் சில கொணர்ந்து வைக்கப்பட்டிருத்தலைக் கண்டு நன்கறியலாம்.

இன்னும், நிலத்தின்மேல் உள்ள உயிர்களைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரிய உருவம் வாய்ந்த உயிர்கள், மக்கள் தோன்றாத அந்நாளிற் கடல் நீரிலும் மணல்வெளிகளிலும் இயங்கின. மக்கள் தோன்றிய பின்னாளிலும் அவ்விரண்டிலுங் காணப்பட்டு வருகின்றன.1 நிலத்தின்மேல் உள்ள தேளை விட மிக மிகப் பெரிய உருவினவாகிய கடற்றேள்கள் ஒன்பதடி நீளம் உள்ளனவாய் அந்நாளில் தோன்றியிருந்தன. அங்ஙனமே, மிகப் பரியவான சில விலங்குகள் எண்பத்து நான்கடி நீளமும், மற்றுஞ் சில நூறடி நீளமும் உள்ளனவாயிருந்தன. இஞ்ஞான்றுள்ள யானையைவிடப்

பத்துப் பதினைந்துமடங்கு பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/75&oldid=1591739" இலிருந்து மீள்விக்கப்பட்டது