உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

51

உருவினவான பேரியானைகளும் அஞ்ஞான்றிருந்தன. ஆனாலும், இவ்விலங்குகளிற் பெரும்பாலன மக்கள் தோன்று தற்கு முன்னமே மாண்டடொழிந்தன. அவற்றுள், உயிர்மாண்டு பனிப்பாறைகளின் ஊடே கிடந்து புதைந்துபோனவை பின்நாளில் அப் பனிப்பாறைகள் கதிரவன் வெப்பத்தால் உருகிக் கரைந்துவிடவே, எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன் மாண்டு போன அவற்றின் முழுவுடம்பும் புத்தப் புதியனவாய்க் கண்டு எடுக்கப்பட்டிருக்கின்றன.பனிப்பாறைகள் இல்லாத இடங்களில் மாய்ந்தவைகளோ அங்குள்ள மண் கற்பாறைகளாய் இறுகிவிட அவற்றினிடையே கிடந்து தசை கழிந்து மட்கிப்போக, வெறும் எற்புக் கூடுகளாய் வெட்டி வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

ங்ஙனம், இருப்பன, ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவனவாகிய சிற்றுயிர்கள் முதன்முதல் நீரிற் றோன்றி இயங்கிப், பின்னர் அவற்றிற் பல நிலத்தின் மேல் இவர்ந்து, வரவரப் பல்கி வாழலாயினாற் போலவே, மக்கள் யாக்கை யினையுடைய உயிர்களும் முதலில் நீரின்கட்டோன்றிப், பின்னர் நிலத்தின் மேல் வந்து உயிர்வாழ்ந்து பெருகலா யினமையும் ஒரு சில நிகழ்ச்சிகளாற் புலனாகின்றது. ஒரு கால் மேல்நாட்டு மக்களாற் செலுத்தப்பட்டுச் சென்ற ஒரு மரக்கலம் ஒரு கடற்பகுதியிற் செல்லுங்கால், அங்குள்ள கடல்நீரினின்றும் மக்கள் வடிவினதாகிய ஓர் ஆண் உயிர், அம் மரக்கலத்தின்மேல் ஏறிவந்து, அதன் முன் அணியத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெண்பாவை யுருவினைச் சிறிதுநேரம் உற்றுநோக்கிக் கொண்டிருந்து, அக்கப்பல் மீகாமனும் பிறருந் தன்னைப் பிடிக்க முயன்றபோது, அக்கடல்நீரிற் குதித்து அமிழ்ந்திப்போன உண்மை வரலாற்றினை எமது ‘சிறுவர்க்கான செந்தமிழ்’ என்னும் நூலில் எடுத்துக்காட்டி யிருக்கின்றேம். இத்தகைய நிகழ்ச்சியிலிருந்து, கடல்நீரிலும் மக்கள் வடிவினவாகிய உயிர்கள் இயங்குதல் அறியப்படுகின்ற தன்றோ? இவ்வாறு எல்லா உயிர்களும் இவ்வூன் உடம்பிற் றேன்றுதற்கு கடல்நீரில் முதன்முதற் றோன்றியே, பன்னெடுங் காலங்களுக்குப் பிறகு மக்களும் நீர்வாழ்க்கையை விட்டு நிலவாழ்க்கையைக் கடைப்பிடிக்கலா யினரென்று உணர்தல் வேண்டும்.

இன்றியமையாத

மாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/76&oldid=1591740" இலிருந்து மீள்விக்கப்பட்டது