உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறைமலையம் - 29

அஃதுண்மையேயாயினும், உயிர்வாழ்க்கைக்கு இன்றி யமையாது வேண்டப்படும் எல்லாக் கருவிகளும் ஒருங்கு வாய்க்கப்பெற்ற இந்நிலத்தின்மிசை உயிர்கள் முதன்முதற் றோன்றாமல், நீரின்கண் முதன்முதற் றோன்றலானது என்னையெனிற், கூறுதும்: படைப்பின் துவக்கத்திலேயே இம் மண்ணுலகம் உயிர்களின் வாழ்க்கைக்கு ஏற்றதாய் இருந்தால், புன்முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்களும் இம் மட்பாங்கர் மிசையே தோன்றியிருக்கும். ஆனால், இந்நிலவுலகின் இயல்போ பல்லாயிரங்கோடி ஆண்டுகளுக்குமுன் இருந்த நிலைவேறு, இங்ஞான்றுள்ள நிலை முழுவதூஉம் வேறு.

வெய்யவன் மண்டடிலம் ஒரு பெருநெருப்புத் திரளையாய் அன்றும் இன்றும் விளங்காநிற்கின்றது. இது நினைத்தற்கும் இயலாக் கடுவிரைவுடன் சுழலா நிற்கையில் இந்நிலமும், திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி முதலான கோள்களும் அவ்வெய்யவனாகிய தீப்பிழம்பினின்றுந் தெறித்துப்போந்த நெருப்புப் பொறிகளேயாகும். சிறிய பொருள்களையே அறிந்து நுகர் தற்பான்மையவான கண் முதலான சிறுபொறிகள் மட்டுமே அமையப்பெற்ற சிற்றறிவினராகிய நம்மனோர் கண்களுக்கு நாம் வாழும் இம்மண்ணுலகம் மிகப் பெரியதுபோற் காணப்படினும், உண்மையான் ஆராய்ந்து காண்பார்க்குக் கதிரவன் மண்டிலமே இந்நிலவுலகத்தைப் பார்க்கிலும் முந்நூற்று முப்பதினாயிர மடங்கு பெரியதாதல் விளங்குமென்று இஞ்ஞான்றை வான்நூலாசிரியர் கணக்குச் செய்திருக்கின்றனர். அதனால், இம்மண்ணுலகங் கதிரவன் மண்டிலத்தினின்றுந் தெறித்துப் போந்த ஒரு சிறு நெருப்புப் பொறியேயல்லால் வேறன்றாதல் தேர்ந்துணரற்பாற்று. அங்ஙனம் ஒரு நெருப்புப்பொறியாய் முதன் முதல் உண்டான இந்நிலவுலகு எத்தனையோ நூறாயிரம் ஆண்டுகளாய் வெம்மை குறைந்து ஆறி இறுகிவருகின்றது. இன்றுங்கூட இதன் உட்பகுதி அளவிடப்படாத வெப்பம் வாய்ந்த தீக்குழம்பு உடையதாய்க் கொதித்துக் கொண்டிருக் கின்றது. இந்நிலத்தின் மையமான இடத்தினூறு ஆங்காங்குள்ள எரிமலைகளின் புழைவழியே இத்தீக்குழம்பு ஒரோவொருகாற் கொதித்துப் பொங்கி மேலெழுந்து வழிந்துவிடுதல் உண்டு; இவ்வாறு வழிதலால் எரிமலைகளின் அடிவாரத்திலும்

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/77&oldid=1591741" இலிருந்து மீள்விக்கப்பட்டது