உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

70

  • மறைமலையம் -29

எத்துணை இழிதொழி லாயினும் அதனைப் புரிதற்குப் பின்னிடை யாராய்த், தம்மை யோம்புதலிலும் தம்மை வீணே உயர்த்தி இறுமாத்தலிலுங் கருத்து மிகுந்து பிறரது நன்மையைப் பொருட்படுத்தாமற், காலம் வாய்த்தபோது பிறர் உடைமைகளைக் கவர்ந்து அவர்க்குத் தீமைசெய்வதிலும், அரசமன்றங்களில் அழிவழக்காடு வதிலும் முனைத்து நிற்கின்றனரல்லரோ? என்றாலும், இவர்களுட் சிலர் இக்காலத்திற்கு வேண்டும் பயனுள்ள முறைகளையும் ஒழுகலாறுகளையுந் தழுவி, ஆங்கிலத்தோடு தமிழ்கற்றும், ஆங்காங்கு அரசியற் றொழிலை மேற்கொண்டும், சாதி வேற்றுமைகளை ஒழித்தும், திரை கடலோடிச் செல்வத்தினைத் தொகுத்தும் வருகின்றன ரென்பதூஉம் மறுக்கற்பாலதன்று. ஆயினும், இவ்வுழுவித் துண்ணும் வேளாளர் தமக்குரிய பண்டை நற்பெருங் கடமை களை முற்றுஞ் செலுத்துகின்றிலர்; அவற்றிற் பெரும்பாலும் வழுவியே நிற்கின்றனர். மேலும், இந்நாட்டவர் களுள் ஆண்பாலார் தமக்கு வழக்கமாயுள்ளபடியே உடையுடுத்தாது, மேல்நாட்டவரைப்போற் காற்சட்டை மேற்சட்டை யிட்டும், தலையிற் குல்லா தொப்பி கவித்தும், அடிகளுக்குச் சப்பாத்து மாட்டியும் பலவகையால் தமது பழைய முறையை மாற்றி வருகின்றனரல்லரோ? பெண்பாலார் தம் காதுகளைத் தாளைத்து அவற்றை மூக்குச்சளிபோல் தொங்கவளர்த்து அவற்றிற் சுமை மிகுந்த பொன்னுருக்களை யிடும் பழைய அழகற்ற முறையை மாற்றி, அவற்றிற் சிறுதுளையிட்டுச் சிவப்பு வைரம் முதலியவற்றாற் சமைத்த அழகிய தோடுகளை அழகுறப் பொருத்தி எழில்மிகுந்து உலவக்காண்கின்றனம் அல்லமோ? பெண்பாலார் தமது மார்பை மூடாமல் திறப்பாக விடுதலும், மார்பின்மேல் துணியிடுவார்கூட இரவிக்கை யிடாது உலவுதலுமே நன்முறையென்று சொல்லிவந்தவர்க ளெல்லாம், பார்க்க அருவருப்பான அந்த முறையை யொழித்து மார்பைப் புடைவையால் நன்கு மறைத்தும் இரவிக்கை யணிந்தும் வரக் காண்கின்றோமே. இன்னும், பத்தாண்டுகளுக்குமுன் காலையிற் பழைய சோறும் மோரும் உண்டு நன்கு வளர்ந்தவர் களெல்லாம், இப்போது விடியும் நேரத்திலேயே காப்பித் தண்ணீரும் உரொட்டியும் உண்ணக் கற்றுக்கொண்டனரே. இங்ஙன மெல்லாம் நமது நாட்டவர் வாழ்க்கையிற் புதிது புகுந்திருக்கும் மாறுதல்களையெல்லாம் எடுத்துரைக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/95&oldid=1591759" இலிருந்து மீள்விக்கப்பட்டது