உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

73

கொணர்ந்து தொகுப் பித்தும் விற்று மக்கள் எல்லாரும் வேண்டும் பொருள்களை அவர்கள் எளிதிற்பெறத் திரட்டித்தந்து பெரிது பயன்படுங் கொண்டுவிற்றற் றொழிலைச் செய்தல் கால்களினால் ஆகுந் தொழிலாகலின் அதனைப் புரியும் வைசியர் இறைவனுடைய தொடைகளினின்றும் பிறந்தவராகச் சொல்லப்பட்டார்; இனி இம்மூவகைத் தொழில்புரிவாரும் ஏவிய பிறதொழில் களை விரைந்துசென்று முடித்து அவர்க்கு மிகவும் பயன்படுங் குற்றேவற்றொழிலைச் செய்தல் பெரும்பாலுங் காலடி களினால் ஆகற்பாலதாகலின் அதனைச் செய்யும் சூத்திரர் இறைவனுடைய திருவடிகளி னின்றும் பிறந்தவராகச் சொல்லப்பட்டனர். ஆகவே, ப்பகுப்புகள் தொழில்பற்றி வந்தனவேயல்லாமல் வேறல்ல வென்பது சொல்லாமே இனிது விளங்கும். அற்றன்று, இறைவனதுவாய் மேலுறுப்பும், அவன்றன் அடி கீழுறுப்பும், ஏனைத் தோளுந் தொடையும் இ டை ப்பட்ட உறுப்புக்களு மாகலின், அம்முறையே மேலுறுப்புக்களிற் றோன்றிய பிராமணர் க்ஷத்திரியர் வைசியர் என்னும் மூவகுப்பினரும் மேலோரெனவும், கீழ் உறுப்பிற்றோன்றிய சூத்திரர் கீழோரெனவுங் கொள்ளுதலே பொருத்தமுடைத்தெனின்; க்கூற்றும் பகுத்துணர்ச்சி இன்மையால் நிகழ்வதொன்றாம்; என்னை? எவ்வகைப் பட்ட உயிரும் உடம்போடு கூடிப் பிறத்தல் என்பது, தந்தை தாயைமருவ வெளிப்படும் பாற்றுளியானது தாயின் வயிற்றுள்ளே கருப்பையிற்புகுந்து தங்கிக் கருவாய்ச் சமைந்து கை கால் முதலான எல்லா உறுப்புகளும் பொருந்திப் படிப்படியே வளர்ந்து முற்றிப், பின் அக்கருப்பையை விட்டகன்று வெளிப்படுதலாகவே எங்கும் எக்காலத்தும் நிகழ்ந்து வருதலைக் கண்டுங் கேட்டும் அறிந்தும் வருகின்றோமாகலானும், இவ்வாறு எங்கும் மாறாமல் நிகழ அமைத்த இறைவனது அமைப்புக்குமாறாக வாயிற் பிறத்தலும் தோள் தொடை அடி என்னும் உறுப்புக்களிற் பிறத்தலும் எஞ்ஞான்றும் எவ்விடத்தும் நிகழக்காணோ மாகலானும் என்பது. அங்ஙனமன்று, மக்களுக்குத்தான் மகவுகளை வயிற்றில் அமைத்துப் பிறக்கவைத்தனனே யல்லாமல், எல்லாம்வல்ல இறைவன் தன்னினின்று மக்களைத் தோற்றுவித்தற்கு அத்தகைய அமைப்பை வேண்டுவான் அல்லன்; அவன் தனது றுப்பில் எந்த இடத்தினின்றும் அவரைத் தோற்றுவிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/98&oldid=1591762" இலிருந்து மீள்விக்கப்பட்டது