உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

  • மறைமலையம் -29

அந்நால்வகுப்பினரும்

6

ச்

இனி, அவ்விருக்குவேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங் களுக்குப்பின், பத்தாம் மண்டிலம் எழுதப்பட்ட காலத்திலே தான் முதன் முதல் நால்வகை மக்கட்பிரிவு தோன்றுவ தாயிற்று. அங்ஙனந் தோன்றியவிடத்தும், மக்களுள் இவ் வகுப்பினர் உயர்ந்தோர், இவ் வகுப்பினர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு தோன்றிற்றில்லை. உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படும் நால்வகைத் தொழில் களைச் செய்வோர் நால்வேறு வகுப்பினராகச் சொல்லப் பட்டன ராயினும், எல்லாம்வல்ல இறைவனுக்குப் புதல்வர்களே யாவர் என்பதுங் கூடவேவைத்துத் தெளித் துரைக்கப்பட்டது. யாங்ஙனமெனிற் காட்டுதும்: இருக்கு வேதத்தின் இறுதிக்கண்ணதாகிய பத்தாம் மண்டிலத்தில் உள்ள புருடசூத்த மந்திரமானது (12), “பிராமணன் அவனது வாய் ஆயினன்; ராஜந்யன் அவனுடைய தோள்கள் ஆயினன்; வைசியன் எனப்பட்டோன் அவனுடைய தொடைகள் ஆயினான்; சூத்திரன் அவனுடைய அடிகளிற் றோன்றினன் என்று ஓதுமாற்றால், நால்வகைப்படுத்துச் சொல்லப்பட்ட மக்கள் அனைவரும் எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளினின்றே தோன்றின ரென்னும் உண்மை இனிது புலப்படாநிற்கும். அற்றேற், பார்ப்பனன் றைவனது மேலுறுப்பாகிய வாயிலிருந்தும், மற்றையோர் மற்றைக் கீழ் உறுப்புகளாகிய தோள் தொடை அடி என்பவற்றிலிருந்தும் தோன்றினர் என அம்மந்திரம் உரைத்தது என்னையெனின்; அந் நால்வகை வகுப்பினரின் தொழில் வேறுபாடுகளை அறிவித்தற்கு அஃது அங்ஙனம் உருவகவகையாற் கூறினதே யன்றி, அவர்களுள் உயர்வு தாழ்வு கற்பித்தற்கு அங்ஙனங் கூறிற்றில்லை. நூல் ஓதுதல் வாயின்தொழில் ஆதலால், ஓதுதற்றொழிலையே தமக்குச் சிறப்பாகக்கொண்ட பார்ப்பனர் இறைவனது வாயினின்றும் பிறந்தவராகச் சொல்லப்பட்டார்; விலங்கு களாலும் பகைவர்களாலுங் குடிமக்களுக்குத் தீங்குநேராமல் வில்லுங் கணையும் பிடித்து வேட்டமாடுதலும் போர்புரிதலுங் தோள்களின் தொழில் களாதலால் அத் தொழில்களைச் செய்யும் ராஜந்யர் இறைவனுடைய தோள்களினின்றும் பிறந்தவராகச் சொல்லப் பட்டார்; ஓரிடத்துண்டாகிய பண்டங்களை விலைகொண்டு பிறிதோரிடத்திற் சேர்ப்பித்தும், பிற இடங்களில் உண்டாகிய பண்டங்களை ஓரிடத்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/97&oldid=1591761" இலிருந்து மீள்விக்கப்பட்டது