உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

85

தோன்றுகின்றன; இங்ஙனமாயின் சாதிப்பகுப்பு எவ்வாறு பொருந்தும்?”

66

'வியர்வையும் சிறுநீரும் மலமும் சளியும் பித்தமும் இரத்தமும் எல்லார்க்கும் பொதுவாய் உள்ளன; எல்லாருடைய உடம்புகளும் அழிந்துபடுகின்றன; இங்ஙனமாயின்

எதனைக்கொண்டு சாதி வகுக்கப்படும்?”

66

அசையும் பொருளும் அசையாப் பொருளுமாகிய வகைகளும் எண்ணிறந்தனவா யிருக்கின்றன; இப் பகுப்புகள் பலவற்றுள்ளும் சாதிவகுப்புச் செய்தல் எங்ஙனம்?”

இவற்றிற்குப் பிருகு மறுமொழி கூறுகின்றார்:

“சாதிவேற்றுமை என்பது ஒன்றில்லை. உலகமுழுதும் நான் முகனாற் படைக்கப்பட்டமையால் தொடக்கத்தில் எங்கும் பிராமணர் மட்டுமே இருந்தனர். தொழில்களி னாலேயே சாதிகள் உண்டாயின.

66

'ஐம்பொறி யின்பநுகர்ச்சியில் விழைவுள்ளவர்களும், காடுமையும் எரிச்சலும் நிறைந்தவர்களும், தாம் வேண்டும் பொருள்களைப் பெறுவதில் ஊக்கம் வாய்ந்தவர்களும், தாம் செய்தற்குரிய உடமைகளை வி விட்டவர்களும், செந்நிறம் வாய்ந்தவர்களும் ஆய் இருபிறப்பாளரான பிராமணர் க்ஷத்திரியருடைய நிலைமையை அடைந்தார்கள்.”

"ஆடு மாடு மேய்க்குந் தொழிலை மேற்கொண்டவர் களும், மஞ்சள் நிறம் வாய்ந்தவர்களும், உழவுதொழிலாற் பிழைப்பவர்களும், தம்முடைய கடமைகளில் நில்லாத வர்களும் ஆய் இருபிறப்பாளரான பிராமணர் வைசிய ருடைய நிலையை

அடைந்தார்கள்.”

66

குறும்பு செய்வதிலும் பொய் கூறுவதிலும் விருப்ப முள்ளவர்ளும், பேரவாப் பிடியுண்டவர்களும், எல்லாவகை யானதொழில்களையும் செய்து அவற்றாற் பிழைப்பவர் களும், கரியநிறம் வாய்ந்தவர்களும், தூய்மை துப்புரவு இல்லாதவர் களும ஆய் இருபிறப்பாளரான பிராமணர் சூத்திரருடைய நிலைமையை அடைந்தார்கள்.

66

இத்தகைய தொழில்களாற் பிரிக்கப்பட்டு இருபிறப் பாளரே சாதிகளாக வகுக்கப்பட்டனர். அறமும் வேள்விச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/110&oldid=1591775" இலிருந்து மீள்விக்கப்பட்டது