உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இயல் - 4

தொல்காப்பியத்திற் சாதிப்பிரிவு

தொழில்பற்றியது

இனித், தமிழர்களின் நாகரிக முதிர்ச்சிக்கு அடிப் படையாய் இருந்தது உழவுதொழிலேயாகும். அவ்வுழவு தொழிலை முதன்முதற் கண்டறிந்தவர்கள் ‘வேளாளர்கள் எனப்படுவர். மனுமிருதி (10, 83) போதாயனதருமசாத்திரம் (1, 10, 30) முதலான ஆரியர்தம் ஒழுக்க நூல்கள் உழவுதொழிலை மிக இழித்துப் பேசுதல்கொண்டு, அத்தொழில் ஆரியர்க்குச் சிறிதும் உரியதல்லாமை நன்கு உணரப்படும். மற்றுத் தமிழ்வேதமாகிய திருக்குறளோ உழவுதொழிலை ஏனை எல்லாத் தொழில்களினுஞ் சிறந்ததாகவைத்து உயர்த்திப் பேசுதலின் அதனை கண்டறிந்தவர்கள்

தமிழரேயாதலும்,

முதன்முதற்

வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி

எனத் தமிழ்ப் பண்டை மறையாகிய தொல்காப்பியம் (மரபியல், 80) அதனை வேளாளர்க்கே வரைசெய்து உணர்த்தலின் அத்தொழில் தமிழருள்ளும் வேளாளர்க்கே சிறப்பாக

உரித்தாதலும் நன்குபுலனாம்.

உழவு தொழிலுக்கு ஏற்றஇடங்கள் யாறு ஏரி முதலான நீர்நிலைகளையடுத்த வளவிய நிலங்களேயாகும்; இவ்வளவிய நிலங்களையே மருத நிலமெனப் பண்டைத் தமிழ்நூல்கள் புகலாநிற்கும். இந் நிலங்களில் நெல் கோதுமை முதலான நன்செய்ப்பயிர்களையும் துவரை உழுந்து முதலான புன்செய்ப் பயிர்களையும் விளைத்து, வேளாளர் அவ்வாற்றாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/129&oldid=1591794" இலிருந்து மீள்விக்கப்பட்டது