உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

105

செல்வமுடையரானமையின், தமது செல்வத்தை உழவுதொழில் அறியாத ஏனையோர் கவர்ந்து கொண்டு செல்லாமைப் பொருட்டுத், தமக்குள் ஒரு தலைவனையும் அவனுக்கு உதவியாக ஒரு படையினையும் அமைத்துவைக்க, அங்ஙனம் அவர் வைத்த தலைவனே நாட் செல்லச்செல்ல அரசன் ஆயினன்'. இங்ஙனம் வேளாண் குடியினர் நிலை பெற்ற மருதநிலத்தின் கண்ணேயே அரச வாழ்க்கையும், அரசன் அரண்மனையும், நகரமும் உண்டானமை,

உழிஞை தானே மருதத்துப்புறனே

(புறத்திணை இயல், 9)

என்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய சூத்திரத்தானும், அதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையானும் உணர்ந்து கொள்க. இவ்வாறு வளப்பம் மலிந்த மருதநிலங்கள், பகலவன் செல்லும் வெப்பம் மிகுந்த நடுக்கோட்டைச் சார்ந்துள்ள இந்திய நாடும், வட ஆப்பிரிக்காவும், நடுஅமெரிக்காவுமே யாகுமென்றும், இந்நாடுகளில் உணவுப் பண்டங்கள் ஏராளமாய் விளைந்தமையின் இவற்றின் கண் இருந்தமக்கள் மிகப் பல்கி நாடுநகரங்கள் அமைத்து நாகரிகத்திற் சிறந்து திகழ்ந்தனரென்றும், நடுக்கோட்டுக்குப் பெரிதும் எட்டியுள்ள வடதேயங்களில் உறைந்தோர்க்கு உழவுதொழில் செய்தலும் உணவுப் பொருள்களை மிகுதியாய் விளைத்தலும் ஏலாமையின் அவர்கள் நாகரிகம் இலராயே இருந்தன ரென்றும் இவ்வியல்பு களைள நன்கு ஆய்ந்த ஆங்கில ஆசிரியர்களும் இவற் றினுண்மையை இனிது எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.2

டம்

ஏராளமான பொருளுடையவரே அவற்றைக் காத்தற்கு ஓர் அரசனையும் அவற்கு உதவியாகப் படைகளையும் அமைத்தல் வேண்டும்; பொருள் இல்லாதவர்க்குக் காக்க வேண்டும் ஏதும் இல்லாமையின் அவர்கட்கு அரசனும் இலன், படைகளும் இல. ஆதலால், இந்திய நாட்டுக்கு வரும்முன் இடமாய் அலைந்து திரிந்த ஆரியர்களுக்கு அரசனும் படைகளும் இல. தமிழரிற் சிறந்த வேளாளரோ உ தொழிலாற் பெருஞ்செல்வராயிருந் தமையின் அச்செல்வத்தைக் காத்தற்பொருட்டு அரசனையும் படைகளையும் அமைக்க வேண்டுவது அவர்க்கு இன்றியமை யாததாயிற்று என்க.

L

லன்,

உழவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/130&oldid=1591795" இலிருந்து மீள்விக்கப்பட்டது