உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மறைமலையம் - 29

நிை

இனி, நாகரிகத்திற் சிறந்த வேளாளர் கல்வியறிவிலும் கடவுள் வழிபாட்டிலும் உறைத்து நின்றமையின், தாம் சென்ற டங்கடோறும் சிவபிரானுக்குப் பெரிய பரிய திருக்கோயில்கள் கட்டுவித்து, அவற்றின்கண் இறைவனுக்குத் தாண்டு புரிதற்காகத் தம்மவருள் ஒரு பகுதியாரைப் பிரித்து அத்தொழிலில் அவர்களை நிலைபெறுவித்து அவர்தம் வாழ்க்கைக்கு வேண்டும் படித்தரங்களையும் ஏற்படுத்தி வைத்தனர். இங்ஙனம் வகுத்துவைக்கப்பட்ட வேளாள அந்தணர்களே இக்காலத்தில் ‘ஆதிசைவர்,நம்பியார்', 'பட்டர்' என்னும் பெயர்களால் வழங்கப்படுகின்றனர். மணச்சடங்குகள் பிணச்சடங்குகள் இயற்றுதற்கும் இவர் களுள்ளேயே ‘சைவக் குருக்களும்' வகுத்துவைக்கப்பட்டனர். தமக்குட் கல்வியறிவிற் சிறந்தோரையும் தவம்புரியும் ஒழுக்கத் தோரையும் தமக்குக் குருவராக மேல்நிறுத்தி அவர்கட்கு ஆண்ட ண்டு திருமடங்கள் அமைப்பித்து, அவர்பாற் சென்று நூலறிவுங் கடவுளுணர்ச்சியும் பெற்றுவரலாயினர். இம்முத்திறத்தவரும் வேளாளரில் அந்தணரும் நூலோதும் பார்ப்பனரும் சமய ஆசிரியரும் ஆவர். இம்முத்திறத்தினரிற் கோயிற் றொண்டுபுரியும் அந்தணரும், சடங்குகள் செய்வித்து நூலோதும் பார்ப்பனக் குருக்களும் மெல்ல மெல்ல வடமொழிச் சொற்களையுங் குறியீடுகளையும் எடுத்தாண்டு கொண்டு ஆரியப்பார்ப்பன இனத்திற் சேர்ந்துகொண்டனர், இன்னுஞ் சேர்ந்து வருகின்றனர். இத் தமிழ்நாட்டின்கண் இப்போது 'பார்ப்பனர்' என்று வழங்கப்படுவார் எல்லாரும் ஆரியப்பார்ப்பனர் அல்லர். வடக்கிருந்து வந்து இங்கே குடியேறிய ஆரியப்பார்ப்பனர் மிகச்சிலரேயாவர். இங்கிருந்த வேளாளப் பார்ப்பனரே நாளடைவில் தம்மை ஆரியப் பார்பனராகத் திரித்துக் கொண்டனர். இத் தமிழ்நாட்டின்கண் உள்ள பார்ப்பனர் எவரும் ஆரியத்தோடு இனமான வடநாட்டு மொழிகளுள் எதனாலும் தம் மனைவிமக்களோடு பேசக்காணாமை யானும், தொன்றுதொட்டு அவர்கள் தமிழ் மொழியிலும், தமிழோடு இனமான மலையாளம் தெலுங்கு கன்னடம் முதலான மொழிகளிலுமே உரையாடக் காண்ட லானும், வடநாட்டிலுள்ள ஆரியப் பார்ப்பனரைப்போல் ஊன் உண்ணக் காணாமையானும் நூல் அளவிற் சிறிது வடமொழி ஓதுதல் பற்றி இவர்களை L இவர்களை ஆரியப்பார்ப்பன ரென்றல்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/131&oldid=1591796" இலிருந்து மீள்விக்கப்பட்டது