உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும் “அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினுங்

66

கடிவரை இலபுறத் தென்மனார் புலவர்”

113

எனவும் ஓதியவாற்றால்' தெளிந்துகொள்க. இங்ஙனம் ரைப்பவே, குறிஞ்சிநிலத்துப் பொது மக்கள் பெயர்: குறவர், குறத்தியர், கானவர், வேட்டுவர், அவருள் தலைமை பெற்றோர் பெயர்: மலையன், கொடிச்சி ஆம் என்பதூஉம், முல்லை நிலத்துப் பொதுமக்கள் பெயர்: ஆயர், ஆய்ச்சியர், அவருள் தலைமை பெற்றோர் பெயர்: அண்ணல், மனைவி ஆம் என்பதூஉம்,பாலைநிலத்துப் என்பதூஉம், பாலைநிலத்துப் பொதுமக்கள் பெயர்: எயினர், எயிற்றியர், அவருள் தலைமைபெற்றோர் பெயர்: மீO, விடலை ல ஆம் என்பதூஉம், மருத நிலத்துப் பொதுமக்கள் பெயர்: உழவர், உழத்தியர்; அவருள் தலைமை பெற்றோர் பெயர்: மகிழ்நன், ஊரன், மனையோள் ஆம் என்பதூஉம், நெய்தல்நிலத்துப் பொதுமக்கள் பெயர்: நுளையர், பரதவர், நுளைத்தியர், பரத்தியர், அவருள் தலைமைபெற்றோர் பெயர்: சேர்ப்பன், துறைவன் ஆம் என்பதூஉம், அவ்வந் நிலத்துத் தலைவர் ஏவிய செய்வார் அடியோரும் வினைவலரும் ஆவரென்பதூஉம் இளம்பூரணர் நச்சினார்க்கினியர் முதலான உரைகாரர்கூறிய உரைகளால் நன்கு பெறப்படும். எனவே, ஒவ்வொரு நிலத்தின் கண்ணும் பொதுமக்களாவாருந் தலைமக்களாவாரும் ஏவிய செய்வாரும் உளர் என மக்களை ஆசிரியன் முத்திறப்படுத்து ஓதினமை இனிது விளங்காநிற்கும். இங்ஙனமாக எல்லா நிலத்தின் கண்ணும் இம்மூவகை வேறுபாடும் உளவேனும், இவை மருத நிலமாந்தர்க்குட் சிறந்து தோன்றுமாப்போல், ஏனை நிலத்துள்ளாரிற் சிறந்து தோன்றுவதன்று; ஏனென்றால், மருதநிலம் ஒன்றுமே உழவு தொழிலுக்கு ஏற்றதாய்ப் பல்வகை உணவுப் பண்டங்களையும் விளைத்துக்கொடுத்து, அவ்வாற் றால் தன்னகத்துள்ள மாந்தரை வளம்பெறச் செய்து, அவருள் அறிவானும் உயர்ந்த ஒழுக்கத்தானும் செல்வத்தானும் மிக்காரை உயர்த்தி, அத்தகைய நலங்கள் இலராய் அந்நலங் களை யுடையாரைச் சார்ந்து அவர் ஏவியசெய்து பிழைக்கும் இயல்புடையாரைத் தாழ்த்தி, அவ்வாறுயர்ந்தாரை உயர்ந்த சாதியாரெனவும் தாழ்ந்தாரைத் தாழ்ந்த சாதியாரெனவும் வேற்றுமை விளங்கித் தோன்றப் பண்ணுந் திறத்தது ஆகலின் என்க. மருதநிலம் ஒழிந்த மற்றைநிலங்களில் உள்ளார்க்குள்

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/138&oldid=1591804" இலிருந்து மீள்விக்கப்பட்டது