உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

ன்ன

115

உணவுகொள்ளுதலை, அங்கே செல்வார் எவரும் இன்றைக்குங் காணலாம். வடநாட்டிலுள்ள சிவபிரான் திருக்கோயில்களிலுந் திருமால் திருக்கோயில்களிலும் இந்துமக்கள் எல்லாரும் ஏதொரு வேற்றுமையும் இன்றி இறைவன் திருவுருவத்தின் கிட்டச் சென்று, எல்லாரும் அத்திருவுருவத்தினைத் தொட்டுத் திருமுழுக்குச் செய்வித்தும் மலர்கள் தூவியும் வணங்குதலை நாடோறுங் காணலாம். ஆனால், இத்தென்னாட்டி உணவெடுக்கும் இட டங்களில் ஒருவரை யொருவர் பாராமல் இனம் இனமாய்ப் பிரிந்து அதனை விழுங்குதலும், உறவு கலக்குங்கால் ஒருவர் மற்றொருவரின் சாதி இழிபுகளைச் சொல்லிக் கலாம் இடுதலும், திருக்கோயிலினுள் இந்துமக்க ளுள்ளேயே சாதியார் செல்லாமை இன்னவர் செல்லலாகாதென்றும் உள்ளே செல்வாருள்ளும் இன்னவர் திருவுருவத்தின் அருகிற்செல்லலாம் இன்னவர் அருகிற் செல்லலாகாதென்றும் இடும் கூக்குரலுமே எங்கும் நிரம்பி, ஒன்றோடொன்று ஓயாமற் சண்டையிடும் ஓநாயும் புலியுங் கரடியுஞ் சிங்கமும் நிறைந்த பாழ்ங்காடாக இந்நாட்டினை ஆக்கிவிட்டன! க்கொடிய சாதிவேற்றுமை என்னும் என்புருக்கிநோய் தென்னாட்டவர்க்கே உரித்தாவதாய், அவர்களது பெருங்கூட்டமாகிய உடம்பை அவர்களறியாமலே தின்று, அவர்கள் இருந்த சுவடுதானுந் தெரியாதொழியும் படி, அவர்களை வேரொடு அழித்துப் பாழாக்கிக், கூற்றுவனுக்குப் பெருவிருந்து ஆற்றும் பெற்றியதாய் ஆங்காங்குப் பெரிதும்பரவி வருகின்றது. இச் சாதி வேற்றுமை யாகிய கொடுநோயை 'மனு மிருதி' என்னும் அழகிய பாழ்ங்குழியினின்றுந் தோற்றுவித்து, அதனை இந்து மக்கட்குழாம் என்னும் உடம்பினுள் நுழையவிட்டவனும் மனு என்னும் ஒரு தமிழவேளாள அரசனே ஆவன். திராவிடதேயத்தின்கண் உள்ள மலையநாட்டில் ஓடும் கிருதமாலை என்னும் ஆற்றங்கரையி லிருந்து தவம் புரிந்த மனு ஒரு திராவிட மன்னனே (த்ராவிடேச்வர:) ஆவன் என்று பழைய மற்சபுராணமும் (1, 12, -13), பாகவதபுராணமும் (8, 24, 7, 13) தெளித்துரைத்தல் காண்க.

6

1

அற்றேற், பண்டைநாளிற் கால்லாமை புலால் உண்ணாமையாகிய அருளொழுக்கத்தில் தலைசிறந்து நின்ற வேளாளர்கள், தமது அருளொழுக்கத்திற்கு மாறாவதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/140&oldid=1591806" இலிருந்து மீள்விக்கப்பட்டது