உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும் பேதைகுணம் பிறருருவம் யான்எனதென் உரைமாய்த்துக் கோதில்அமுது ஆனானைக் குலாவுதில்லைகண்டேனே

127

(திருவாசகம், கண்டபத்து,5)

என்று அருளிச்செய்திருக்குந் திருப்பாட்டாற், சாதி குலம் பிறப்பு என்பவைகள் மக்களை மேல் நிலைக்குச் செல்ல வொட்டாமல், அவர்களைத் தற்செருக்கால் மயங்கச்சுழற்றி ஆழ்த்தி மடிவிக்கும் மீளா நீர்ப்பெருஞ் சழிகளாதலை அறிகின்றனம் அல்லமோ?

னிப், பௌத்தசமய காலத்திலிருந்து அதனை ஒடுக்கிய மாணிக்க வாசகர்க்குப்பின், சமணசமயகாலத் திருந்தவரும், சமண்மதம் புகுந்து பின் சிவபெருமான் றந்த சூலைநோயால் மீண்டுஞ் சைவசமயம் புகுந்தவரும், சமண அரசனாகிய மகேந்திரவர்மன் தம்மைக் கருங்கல்லிற் பிணைத்துக் கடலில் வீழ்த்தவும் சிவபிரான் திருவருளால் அக்கல்லையே புணை யாகக்கொண்டு கரையேறி அவ்வரசனையும் சைவனாக்கு வித்தவரும், சைவ பிறந்தவருமான

திருநாவுக்கரசுநாயனார்,

வேளாண்குடியிற்

சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள் கோத்திரமுங் குலமுங் கொண்டு என்செய்வீர்

பாத்திரஞ் சிவமென்று பணிதிரேல்

மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே

(திருமாற்பேறு)

என்றருளிச் செய்து வெறுங் குலங்கோத்திரங்களால் இறைவன் திருவருளை யெய்துதல் ஆகாதெனவும், மெய்யன் புடைமையே அதனைப் பயக்குமெனவும் அறிவுறுத்திய தோடு, முக்கோலும் புற்கட்டும் எடுததுத் தோற்பூணூலும் பூண்டு 'யான் பார்ப்பனன்' என்று தன்னைப் பெருமை பாராட்டுதலால் ஒருவன் ஏதும் பயன்பெறான், நுண் உணர்வால் வரும் மெய்யன்பே ஒருவற்கு மெய்ப்பயன் தருவதா மென்பது போதரக்,

“கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமும்

தோலும் பூண்டு துயரம்உற்று என்பயன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/152&oldid=1591818" இலிருந்து மீள்விக்கப்பட்டது