உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மறைமலையம் - 29

நீலமா மயிலாடு துறையனே

நூலும் வேண்டுமோ நுண்உணர்ந் தோர்கட்கே”

(திருமயிலாடு துறை)

என நன்கெடுத்து அருளிச்செய்தமை காண்க. பார்ப்பனரையே பிறப்பளவில் உயர்ந்தவராகக் கொள்ளாத அப்பருக்கு, வேளாளரைப் பிறப்பளவில் உயர்த்துதல் சிறிதும்

உடன்பாடாகாதன்றோ?

அழ

இனித், திருநாவுக்கரசு நாயனார்பாற் கரைகடந்த மெய்யன்பு பூண்டு, அவ் அன்பின் பெருக்கால் தம் புதல்வர்க் கெல்லாம் திருநாவுக்கரசு நாயனாரது திருபெயரையே வைத்து அழைத்தும், தாம் அறத்திற்காக வழிநடையில் அமைத்த கிய தண்ணீர்ப்பந்தருக்கும் அப்பெயரையே சூட்டியும் ஒழுகிய அந்தணரான அப்பூதியடிகள், திருநாவுக் கரசு நாயனார் தமதில்லத்திற்கு எழுந்தருளக்காண்டலும் தம்ம வருடன் சென்று அவர்தம் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி அவரோடு அருகிருந்து உணவுகொண்ட அன்பின் திறங்க ளெல்லாம் அன்பின் வழிப்படும் நல்லார்க்கு நினையுந்தோறும் அகம்நெகிழ்ந் துருகச்செய்யும் இயல்பின வாமன்றோ?

இனி, உலக இயல்பினையுந் தன்னியல்பினையுங் கடவுளியல்பினையும் உணரல் இயலாத மூன்றாண்டுச் சிறுகுழந்தையாயிருந்த காலத்திலேயே அம்மையப்பர் வடிவாய்த் தமது கண்ணெதிரே தோன்றிய முழுமுதற் கடவுளைக் கண்டு, அதனால் ஞானப்பால் ஊட்டப்பெற்று எல்லாம் ஓதாதுணர்ந்து, கண்டோரெல்லாம் இதனை யொப்பதொரு புதுமை யாண்டுங் கண்டிலேம் என வியந்து வணங்கத், தமது சிறுகுதலைவாய் திறந்து அம்மையப்பரை எண்ணிறந்த திருப்பதிகங்களாற் பாடிக், கடவுள் இல்லை யென்று நாத்திகம் பேசித் தமது அருளொழுக்கத்துக்கே மாறாக எண்ணிறந்த சிவனடியார்களைத் தீயிட்டுக் கொளுத்தத் துணிந்த சமணர்களை ஒடுக்கி, அவர்க்கும் பிறர்க்கும் எதிரிலே சிவபெருமான் உளன் என்பதைப் பல புதுமைகளால் விளங்கக் காட்டிய அந்தணரான திருஞானசம்பந்தப் பிள்ளையார்,

66

“எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்கு இங்கே என்று அருள்புரியும் எம்பெருமான்”

(திருப்பிரமபுரம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/153&oldid=1591820" இலிருந்து மீள்விக்கப்பட்டது