உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

129

என்றருளிய திருப்பாட்டால் தன் அடியார் உயர்ந்த குடியிற் பிறந்தாரேனும் இழிந்தகுடியிற் பிறந்தாரேனும் அவர் எந்தநிலையில் உள்ளாரேனும் அவர்தம் அன்பின் பெருக்கையே பாராட்டி இறைவன் அவர்க்கு அருள்

விளக்கினரல்லரோ? இன்னும் அவல்,

66

'குலவராகக் குலம் இலருமாகக் குணம் புகழுங்கால் உலகின் நல்லகதி பெறுர்”

எனவும்,

புரிவானென

(திருப்புகலூர்)

“நலம் இலராக நலமதுண்டாக நாடவர் நாடறிகின்ற குலம் இலராக குலமதுண்டாகத் தவம்பணி குலச்சிறை பரவும்”

(திருவாலவாய்)

ரவில்

எனவும், அடியார் எக்குடிப் பிறப்பினராயினும் அவரது குடிப்பிறப்பு நோக்காது அவரைச் சிறப்பித்துக் கூறுதல் காண்க. இங்ஙனம் அவர் தாம் மொழிந்த சொல்லளவில், அமையாது, தாம் மொழிந்தபடியே அன்பின்மிக்க அடியார்பால் ஏதும் சாதிவேற்றுமை பாராட்டாது அதனைத் தமது செய்கையிலுங் காட்டி யொழுகினார். பாணச்சாதியிற் பிறந்த திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் அவர் மனைவியாரையும் எப்போதும் தம்முடனேயே வைத்திருந்ததோடு, பார்ப்பனரான திருநீலநக்க ரென்னும் மற்றொரு சிவனடியார் திருமாளிகைக்கு எழுந்தருளிய போது அவரோடு ஒருங்கிருந்து திருவமுது கொண்டு, திருநீலநக்கரது மிகவுந் தூயதான் வேள்விமேடையிலே யாழ்ப்பாணருக்கும் அவர் மனைவி யார்க்கும் இருக்கை அமைத்தனர்கள். அவ்விருவரும் அம்மேடையிற் சென்றவுடனே, அங்கே வேள்விக் குண்டத்தில் இடஞ்சுழித்து எரிந்த சிவத் தீயானது இவர்களின் வரவால் மிகமகிழ்ந்து வலஞ்சுழித் தெழுந்து எரிந்ததெனச் சேக்கிழார் அடிகள் அருளிச் செய்திருக்கின்றார். பாணரென்பவர் பறைச்சாதியிற் சிறிது மேலானவரென்று எண்ணப் பட்டவர்; இவ்வியல்பினரான பாணரை நம் திருஞான சம்பந்தப் பெருமானும் திருநீலநக்கரும் தம்மோடு உடன் வைத்து அளவளாவினதும், அவ்வருமையைத் தீவடிவாயிருந்த நம் ஆண்டவன் ஏற்றுக்கொண்டு மகிழ்ந்ததும் போலிச் சைவர் உணரர் கொல்லோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/154&oldid=1591821" இலிருந்து மீள்விக்கப்பட்டது