உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

141

பாராட்டுதலினும் அறிவுடையார் ஒருவர் பாராட்டுதலே உயர்ந்ததாகுமென்று உணர்மின்கள்!

L

அங்ஙனமாயின் “இழியாக்குலத்திற்பிறந்தோம்,” “குலம் பொல்லேன்' என்று சமயாசிரியரான திருநாவுக்கரசு நாயனார் குலத்தின் உயர்வையும் தாழ்வையும் எடுத்துக் கூறியது என்னையெனின்; ‘அருள் ஒழுக்கத்தில் மிகுந்து சிவபிரா னிடத்தும் அடியாரிடத்தும் அன்பு மிக்க குலத்திற் பிறந்தோம்' என்றும், ‘அவ் வொழுக்கங்கள் இல்லாத குலத்திற் பிறந்தோம்’ என்றும் பொருள் கூறுதலே ஆசிரியர் நாயனார் கருத்தா மென்று துணிக. இவ்வுண்மை யுணராது பிறப்பினாலேயே குலப்பெருமை சொல்லுவாரின் அறியாமையைச் “சாத்திரம் பலபேசுஞ் சழக்கர்காள், கோத்திரமுங் குலமுங்கொண் டன்செல்வீர்" என்று நாயனாரே திருவாய்மலர்ந்தருளிய திருப்பாட்டால் உணர்ந்து தெளிக. பிறப்பினாற் சைவரென்று தம்மை உயர்த்துச் சொல்லிக் கொள்வோரிற் சிலர் அருளும் ரக்கமும் சிவபிரானிடத்து மெய்யன்பும் அடியார் பணியும் இல்லாராய்ச், செருக்குமிகுந்து, பொய்யும் புனைசுருட்டும் கள்ளமும் பொறாமையும் நிரம்பிப், பிறரைக் கொல்லாமற் கொல்லுவதிற் கருத்தூன்றி அலைகின்றார்கள்; இத் தன்மை யோரை உயர்ந்தகுலத்தவர் என்று கூற அறிவுடையோர்க்கு நா எழுமா? உலகத்தாரும் அறிவுடையாரும் ஒருவன் பிறப்பை நோக்காது ‘அவன் நல்லியல்பு உள்ளவனா? நல்லொழுக்கம் வாய்ந்தவனா?' என்றன்றோ வினாவு கின்றார்கள். ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும் தாம் 'குடிமை என்னும் இயலில் உயர்குலம் இழிகுலம் என்றன ஒழுக்கத்தாற் சிறந்தகுலம் ஒழுக்கத்தாற் றாழ்ந்தகுலம் என்று வெள்ளிடை மலைபோல் விளங்க உரைத்தாராகவும், ஆசிரியர் கருத்தறிந்த பரிமேலழகியாரும் 'நான்கு வருணத்திலும் உயர்குலமும் தாழ்குலமும் உண்டென்பதை விளக்கினாராகவும் அவற்றை அறியும் அறிவு மதுகை சிறிதுமில்லாத போலிச்சைவர் குலம் பிறப்பினாலேதான் உளது என்று நாயனாருஞ் சொன்ன ரெனத் தமக்குத் தோன்றி யவாறெல்லாம் பிதற்றுவர்; அவர் பிதற்றுரையின் பொய்ம்மையை யாம் மேலே எடுத்துக் காட்டிய “ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம், இழிந்த பிறப்பாய் விடும்." என்னும் நாயனாரது அருமைத் திருக்குறளால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/166&oldid=1591833" இலிருந்து மீள்விக்கப்பட்டது