உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

-

மறைமலையம் 29

அறிவான்மிக்க ஆன்றோர் அவரை உண்மைச் சைவரென உயர்த்துப் பாராட்டுவர்!

வரவர வலிவிழந்து

மேலும், "முப்பது நாற்பது நூறு இருநூறு வீட்டுக் காரர்களுக்குள்ளேதான் யாங்கள் உண்ணல் கலத்தல்களைச் செய்வோம்” எனத் தருக்கிப் பேசி அவ்வாறு நடந்துவரும் போலிச்சைவரின் குடும்பத்தாருடம்புகளிற் பழைய இரத்தமே ஓடிவருதலால், அவர்கட்குப் பிள்ளைப்பேறு வாயாமற் போகின்றது; பிள்ளைப்பேறு வாய்ப்பினும் உயர்ந்த அறிவும், திட்பமான மனமும், முறுக்கான யாக்கையும், சிறந்த தன்மையும் வாய்ந்த பிள்ளைகளைப் பெறுதல் அவர்களுள் அரிதினும் அரிதாய்ப் போகின்றது. புதுநீர் வரத்தின்றிப் பழைய கட்டுக்கிடைத் தண்ணீரேயுள்ள ஒரு குளம் நாற்றமெடுத்து, நோய்ப்புழுக்களை யுண்டாக்கி யார்க்கும் பயன்படாமல், வரவர வற்றிவறண்டு முடிவில் நீரற்றுப்போதல் போல, அகலஉள்ள குடிகளில் அறிஞராய் வலியராய் நல்லராய்ப் பிறந்தார் தம் புதிய இரத்தமானது, தமது பழங்குடிப் பிறந்தார்தம் உடம்புகளில் வந்து கலத்தற்கு இடங்கொடாத போலிச்சைவக் குடும்பத்தினருந் தமது வலிவிழந்த பழைய இரத்தங்கெட்டு அகத்தும் புறத்தும் நோய்களுக்கு இரையாகி வற்றி வறண்டு போகத் தாமும் இருந்த இடந் தெரியாமற் சிலகாலத்தில் மாய்ந்துபோகின்றனர்.

பார்மின்கள்! வள்ளைக்காரருள்ளும் அவரோடொத்தார் பிறருள்ளும் இத்தகைய பொல்லாப் போலிச் சாதிக் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா? இல்லையே; அவை இல்லாமையின், அவர்கள் தம்மில் ஆண்மக்களும் பெண்மக்களும் தத்தம் இயற்கைக்கு இசைந்தாருடன் இனிதுகூடி வாழ இடந்தந்து, அவ்வாற்றால் அறிவிலும் ஆண்மையிலுஞ் சிறந்த மக்களை அளவின்றிப் பெற்று, உலகமெங்குந் தாமாகவே பரவி, எல்லா நலங்களும் எய்தி, அந்நலங்கள் இல்லாத நம் நாட்டவர்களைத் தம் அடிக்கீழ்ப்படுத்து, நம்மனோர் தம்மைச் சார்ந்து அண்டிப் பிழைக்க நம்மை ஆண்டு நமக்கு உதவியும் புரிந்துவருகின்றனர். இவ்வாறிருக்க, அளவிறந்த சாதிக் கட்டுப்பாடுகளுடைய ய ம்மனோர், அச் சாதிக்கட்டுப் பாடுகளாற் பெற்ற பயன் ஏதேனும் உண்டா? ஏதுமேயில்லை. அவற்றால் உயர்ந்த

நம் இந்தியநாட்டவர் அல்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/181&oldid=1591849" இலிருந்து மீள்விக்கப்பட்டது