உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயன்கள்

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

157

உண்ட ாகாவிடினும் விடுக; தீமைகளேனும் ளையாமலிருக்கின்றனவா வென்றால் அப்படியுமில்லை; அவை நன்மையைத் தராதமட்டில் அமையாமல், அடுத்தடுத்துப் பல தீமைகளையும் விளை விக்கின்றன! தம்மை உயர்ந்தசாதியாராக நினைப்பவர்கள் தம்மோடொத்த மக்களை

எவ்வளவு வு இழிவாக நினைத்து இறுமாக்கின்றார்கள்! இழிந்தோராக ஒதுக்கப்பட்டவர்கள் எவ்வளவு துன்பத்தை அடைந்தாலும் அவர்களை உயர்ந்த சாதியார் என்போர் கண்ணெடுத்தும் பார்க்கின்றார் களில்லையே! தாழ்ந்த சாதியாரிடத்தில் எல்லாவகையான ஏவற்றொழிலையும் வாங்கிக்கொண்டு அவ்வாற்றால் மிக்க செல்வமுடையராய்

வாழ்கின்றவர்கள், அவ்வேழை ஏவலர் ஒருநாளைக்கு ஒருவேளை கூழ்உணவு கூடக் கிடையாமற் களைத்துக்கிடக்க, அவர்கட்கு ஒருபிடி சோறாவது கொடுக் கின்றார்களா, இல்லையே! இழிந்த சாதியார் கடுவெயிலில் நாள் முழுதும் நின்று கை எரியக் கால் ஓய முதுகுநோவ வெட்டியெடுத்துத் தந்த கிணற்றுநீரைத் தமது வீட்டு நிழலிலிருந்து வெட்டிவேர் இட்டு மணம் ஊட்டிப் பருகுகின்ற மேற்சாதியார், அ கீழ்ச்சாதியார்கள் வெயிலால் நாவறண்டு உடல்தளர்ந்து ஒரு குடங்கை நீராவது முகந்து குடிக்கலாம் என்று அக்கிணற் ண்டை வந்தால் அவர்களை எவ்வளவு வன்னெஞ்சத்தோடுந் துரத்துகின்றனர்!

மேற்சாதியாரென்போராவது

தமக்குள்

க்

அன்பும் ஒற்றுமையும் பூண்டு ஒழுகுகின்றார்களாவென்றால் அப்படியும் இல்லை. அவர்கள்ளும் பற்பல சாதிவேற்றுமைகள்! ஒருசிறு வகுப்பினர் மற்றொரு சிறுவகுப் பினரைத் தம்மிற் றாழ்ந்தவர் எனக் கருதி அவரோடு உண்ணல் கலத்தல்களைச் செய்யாமல் இறுமாக்கின்றனர்! எந்நேரமுஞ் சாதியுயர்வு தாழ்வுகளைப் பற்றியே பேசுகின்றனரல்லாமல், வேறு உயர்ந்த பொருள் களைப்பற்றி எட்டுணையும் பேசுகின்றிவர். இன்னகாலத்தில் அழியும் என்று அறியப்படாத ஊடனும்பின் பிறப்பையே எந்நேரமும் நினைந்து அறியாமையில் மாழ்க்கிடக்கும் இப் பேதைமக்கட்கு உயர்ந்த நோக்கங்களும் உயர்ந்த பொருள் களைப்பற்றிய பேச்சுக்களும் எங்கே யிருந்து எப்படிவரும்? இவ் இந்துமக்களைப்போல ஒற்றுமை கெட்ட நெல்லிக்காய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/182&oldid=1591850" இலிருந்து மீள்விக்கப்பட்டது