உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

159

பெண்மக்களும்

தமது நிறை சிதைந்த நம் இந்துப் எண்ணிறந்தவர்கள்! அறம் வழுவாத நம் ஆங்கிலவேந்தரின் ஆட்சி இந்நாட்டில் நிலைபெற்றபின்னரன்றோ, நாமும் நம் பெண்மக்களும் அச்சமின்றி இனிது வாழ இடம்பெற்றோம். இந்தச் சீரிய அரசியலிலுங்கூட, ஒதுங்கியுள்ள நாட்டுப் புறங்களில் இடம் பொருள் ஏவல்களால் வலியராய் உள்ளார் தம்மைச் சூழ்ந்திருக்குங் குடிமக்கட்குப் பெருந் தீங்குகள் செய்துவருகின்றார்கள்; அத் தீயார் இருக்கும் இடங்களிற் கற்புடைய மகளிரும் இருப்பரோ என்பது ஐயுறற் பாலதாகவே யிருக்கின்றது. சில ஆண்டுகளுக்குமுன் மலையாள நாட்டில் நிகழ்ந்த கொடியநிகழ்ச்சிகள் இன்னும் நமது நினைவைவிட்டு நீங்கிற்றில, அங்குள்ள நம்பூரிப் பார்ப்பனரும் நாயர்களும் நீள இழைத்துவந்த சாதிவேற்றுமைக் கொடுமைகளைப் பொறுக்க ஏலாமையாலன்றோ, அங்குள்ள துலுக்கர்கள் அவர்களை உயிரோடுவைத்துத் தோலுரித்தும், அவர்களின் மகளிரைச் சிறைபிடித்துச் சென்றும், அவர்களின் இல்லங்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அவர்கள் தொழுங் கோயில்களை இடித்துப் பாழாக்கியும் நினைப்பினும் நெஞ்சம்நடுங்கும் வகையா லெல்லாம் அவர்களைத் துன்புறுத்தினார்கள்! அங்குள்ள நம்பூரிகளும் நாயர்களும் தம்மோடொத்த மக்களான ‘தீயர்,’ ‘ஈழுவர்’, ‘புலையர்' முதலியோரைக் கொடுமைப்படுத்தாமல் அன்பாக நடத்தியிருந்தாற், பெருந்தொகையினரான அவர்களெல்லாரும் ஒருங்குசேர்ந்து, சிறுதொகையினரான நம்பூரிகளையும் நாயர்களையும் பாதுகாத்துத், துலுக்கர்களை எளிதில் அடக்கியிருப்பரன்றோ! நம் ஆங்கில அரசினர் தம் படைகளை விடுத்து அத் துலுக்கர்களை அடக்கியிரா விட்டால், நம்பூரி நாயர்களின் சாதிக்கட்டுப்பாடுகளெல்லாந் துகளாய்ப் பிறந்து, மலையாளம் முற்றுந் துலுக்கநாடாய்ப் போயிருக்குமன்றோ? இவ்விந்திய நாடெங்கும் பார்ப்பன ராலும் போலிச்சைவர்களாலும் வேரூன்றி நிற்கும் சாதிவேற்றுமையால், எல்லா மக்களும் எண்ணிய

ங்காப்

பற்பல பிரிவினராகி ஒற்றுமைகெட்டு, ஒருவரிடத்தொருவர் அன்பிலராய்த், தம்மைத்தாமே பெரியராகநினைந்து இறுமாந்து நடக்கின்றனர்; இவர்களைத் துலுக்கர்கள் மற்றொருமுறை எதிர்க்க நேரம் வாய்க்குமானால், இந்துக்கள் அனைவரும் வேரோடு மாய்க்கப்படுதல் திண்ணமாய் முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/184&oldid=1591852" இலிருந்து மீள்விக்கப்பட்டது