உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம் - 29

நுங்களிறுமாப்பினையும் நுங்கள் சாதிக் கட்டுப்பாடு களையும் எளிதில் மாய்த்தொழிக்குமேயென அஞ்சுகின்றோம்! வெள்ளம் வருவதற்கு முன்னரே அணைகோலிவைத்தல் அறிவுடையார் செயலாதல்போலப், பெருந் தீமைக்கு ஏதுவான கலகம் வருதற்குமுன்னமே அதனை வருவிக்குஞ் சாதிவேற்றுமை யினைத் தொலைத்துவிடுமின்கள்!

ஆடு மாடு குதிரைகளைப்போலச் சைவவுணவு மட்டுங் கொள்ளுதலால் நீங்கள் நுங்களைச் ‘சைவர்’

எனச்

சொல்லிக்கொள்ளுகின்றீர்கள்; நீங்களேனும் மருத்துவர் சொல்லைக் கேட்டுச் சிலகாலங்களில் ஊனுணவையும் உட்கொள்வீர்கள்; ஆனால், ஆடு மாடு ஆடு மாடு குதிரைகளோ எக்காலத்தும் ஊனுணவுகொள்ளா; கடவுள் இல்லையென நாத்திகம் பேசும் சமணர்கள் கொல்லா அறத்தில் நுங்களை விடப் பன்மடங்கு சிறந்தவர்கள் ஊன் உண்ணாமையே ‘சைவம்’ என நுவலுவீர்களாயின், ஆடு மாடு குதிரை களையும் சமணரையுமன்றோ நுங்களைவிடச் சிறந்த சைவராகச் சொல்லுதல் வேண்டும்? அற்றன்று, நாங்கள் சிவபெருமானை வழிபடுகின்றோம், தேவார திருவாசகங்கள் ஓதுகின்றோம், திருநீறும் சிவமணியும் அணிகின்றோம், ஐந்தெழுத்து மந்திரம் உருவேற்றுகின்றோம், அடியார் திருத்தொண்டின் பெருமை களையும் 'சிவஞானபோதம்' முதலான சைவசித்தாந்தத் தனிப்பெரு நூல்களையும் பயின்றறிகின்றோம்; இவைகளே சைவராகிய எமக்குச் சிறப்படையாளங்கள் என்று உரைப்பீர் களாயின், வ் வடை யாளங்கள் உடையவர் யவர் நுங்களில் எத்தனைபேர் உளர்? பதினாயிரவரில் ஒருவரேனும் உளரா? துணிந்து சொல்வீர் களா? சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதற்குரிய இலக்கணங்களை நுங்களில் நன்கு உணர்ந்தவர் எவ்வளவு பேர்? தேவார திருவாசகங்களுக்குப் பொருளும் அவற்றைப் பிழையற ஓதுதலுந் தெரிந்தோர் எவ்வளவினர்? திருநீறு, சிவமணி, ஐந்தெழுத்து என்பவற்றின் உண்மையை யாராய்ந்தறிந்தோர் எத்தனைபேர்? 'பெரிய புராணம்', சிவஞானபோதம் என்பவற்றின் பெயர்களையேனுந் தெரிந்தோர் நுங்களில் ஆயிரத்தில் ஒருவரேனும் உளரா? உண்மைச் சைவர்க்குரிய இவ் வடையாளங்களுள் ஒரு சில ரு தாமும் வாய்க்கப்பெறாதார் வெறும் பெயரளவில் தம்மைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/189&oldid=1591857" இலிருந்து மீள்விக்கப்பட்டது