உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

2. ஆரிய நாற்சாதியில் வேளாளர் அடங்காமை

இத் தன்மையினரான வேளாளரை ஆரியர் கூறும் நால்வகைச் சாதிப் பெயரால் வழங்காமல் அவர் கொண் நாற்சாதியார்க்கும் முற்பட்டவராகவும் அந் நால்வரினும் மேற்பட்டவராகவும் கொள்ளுதலே பொருத்த முடைத்தாம். ஏனென்றால், வேளாளரினின்றே அந்தண வகுப்பும் அரச வகுப்பும் பிரிந்தமையின் இவர்களைப் பிராமணரென்றாவது சத்திரியரென்றாவது கூறுதல் பொருந்தாது; அல்லது ஆநிரை காத்து உழவும் வாணிகமும் நடாத்துதல் பற்றி இவரை வைசிய ரென்போ மென்றால், இவர்களுட் பலர் அந்தணராயும் அரசராயும் பண்டுதொட்டு வாழ்ந்துவரக் காண்ட லால், வர்களை அவ்வாறு வைசியரென்று வரையறுத்துக் கூறுதலும் ஆகாது.

இனி, இவரைச் சூத்திரரென்று கூறுவோமென்றால், அது முற்றும் அடாத உரையாம். ஆரியர் கூற்றின்படி, சூத்திரரென் போர் பிராமணர் சத்திரியர் வைசியர் என்னும் மூன்று சாதியார்க்குங் குற்றேவல் செய்தல் ஒன்றே உடையரல்லது, வேறு ஏதோர் உரிமையும் ஏதோர் உடைமையும் ஏதொரு முதன்மையும் உடை உ யரல்லர். மற்று, வேளாளரோ அந்தணராயிருந்து நூலோதல் ஓதுவித்தல் திருக்கோவில்களிற் கடவுளுக்கு வழிபாடு ஆற்றல் முதலான உயர்ந்த தொழில்கட்கு உரிமையும், அரசர்க்கு முடிசூட்டும் உரிமையும் அரசாளும் உரிமையும், பண்டுதொட்டுப் பெற்றாராய் வரக்காண் லானும், அரசர்களாயும் பெருஞ்செல்வர்களாயும் முன்னும் பின்னுமிருந்து வருகின்றமையின் அவர்கள் எல்லாச் சல்வங்களும் உரையராதல்தானே பெறப்படுதலானும், இவ்வாறெல்லாம் அறிவுஞ் செல்வமும் கல்வியும் வாய்த்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/223&oldid=1591892" இலிருந்து மீள்விக்கப்பட்டது