உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

  • மறைமலையம் -29

நன்று கூறினாய், நான்காம் முறைமைக்கண் வைத்துக்கூறிய துணையானே அவரைச் சூத்திரரெனக் கொண்டாரென்பது ஆசிரியன் கருத்தை முன்னொடுபின் ஆராய்ந்து உணர மாட்டாதார் கூற்றாம்.

ஆசிரியர் இன்னாரை இன்ன வகுப்பினர் எனக் கொண்டானென்பது, அவரவர்க்கு வரையறுத்த தொழில் களை அவன் எடுத்துக் கூறும் வழியா னல்லது வேறு வகையாற் றுணியப்படாது. மேலே யாம் விளக்கிக் காட்டியபடி பழைய ஆரிய நூல்கள் சூத்திரர்க்கு வரையறுத்த தொழில்; மேல் வகுப்பினர் மூவர்க்கும் அவர் ஏவிய குற்றேவற்றொழில் புரிதல் ஒன்றேயாம்." சூத்திராவார் உழவுதொழிலாயினும் வாணிக மாயினுஞ் செய்தற்கு உரிமையுடைய ரல்லர். ஆரியர் வகுத்த சூத்திர வகுப்பில் வேளாளரை அடக்குதல் ஆசிரியர் தொல் காப்பியனார்க்குக் கருத்தாயின் அவர் அவ்வேளாளர்க்குக் குற்றேவற்றொழில் ஒன்றுமே கூறியிருப்பர்; மற்று அவர் அவ்வா றுரையாது, ஆரிய நூல்கள் வைசியர்க்கு உழவு தொழிலைச் சிறந்ததாக வைத்துக் கூறுமாறு போலவே,

"வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”

எனக் கிளந்து கூறினாராகலின் அவரைச் சூத்திரரெனக் கோடல் அவர்க்குக் கருத்தன்றாதல் துணியப்படும்.

மேலும்,வேளாளர் காடு கெடுத்து நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கி உழவுசெய்யும் வகையினை முதன்முதற் கண்டறிந்த நாகரிக உயர்குடி மக்களாதல் பற்றி அவர்க்கு உழவுதொழிலைச் சிறந்ததாக வைத்துக் கூறினாராயினும், அவர்கள் அரசர்க்கு உதவியாளராய் அவர்க்குப் படைத்தலைவரும் அமைச்சரும் ஆதற்குரியா ரென்பதூஉம், அரசர் தரும் வரிசைகளைப் பெற்றுக் குறுநிலமன்னர் ஆதற்குரியாரென்பதூஉம் மேற் சூத்திரத்தை யடுத்து,

“வேந்துவிடு தொழிலிற் படையுங் கண்ணியும்

வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே'

என்று ஆசிரியர் மீண்டுங் கூறுதலாற் றெளியப்படும். இங்ஙனம் வேளாளர் ஒருவர்க்கே யுரிய சிறப்புத் தொழிலும், அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/243&oldid=1591920" இலிருந்து மீள்விக்கப்பட்டது