உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மறைமலையம் - 29

கண் மூன்முறாம் வகுப்பினராக ஓதப்பட்டவர் வேளாளரே யாதல் ஐயுறவின்றித் தெளியப்படுகின்ற தன்றோ? இவ்வாறு வ்வறுவகைத் தொழில் வேளாளர் ஒழிந்த எனைக் கீழ் வகுப்பினர் பதினெண்மருக்கும் பெரும்பாலும் இல்லாமை யானும், அவை இல்லையாகவே அவற்றின்கட் சிறந்து வென்றி பெற்றுத் தோன்றுதலும் அவர்க்கில்லாமையானும் அந் நான்காம் வகுப்பினரை ஆசிரியன் இச் சூத்திரத்தின்கண் ஒதிற்றிலன்.

அற்றேல், இவ் வாகைத்திணைச் சூத்திரத்தில் வேளாளரை மூன்றாம் வகுப்பின்கண் வைத்து ஓதிய ஆசிரியன், மரபியலில் ‘வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை' என வைசியனை மூன்றாம் முறைமைக்கண் வைத்து, அதன் பின் என்னுஞ் சூத்திரத்தை நிறுத்தி

'வேளாண்மாந்தர்க்கு'

66

வேளாளனை நான்காம் முறைமைக்கண் வைத்தோதியவா றென்னை யெனின் உழவும் வாணிகமும் வேளாளர்க்கு ஒப்ப உரியவாயினும், அவருள் ஒரு பகுதியார் உழு தொழிலைவிட்டு வாணிகம் ஒன்றையே நடத்துங்கால் அவரை அத் தொழில் பற்றி அஞ்ஞான்று வேறு பெயரான் வழங்கினமை தெரிப்பர் 'வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்றோதினார்; இக் காலத்திலும் வாணிகஞ் செய்யும் வேளாளர் 'வேளாண் செட்டிகள்' என்று வழங்கப்படுதல் காண்க. உழவு தொழில் வேளாளர்க்கு என்றுஞ் சிறந்த உரிமையாதல் பற்றி அவர்க்கு எஞ்ஞான்றும் வழங்கும் 'வேளாண்' பெயராற் சூத்திரஞ் செய்தார். இவ்வாறு 'வேளாளரை இருவேறு தொழில்பற்றி இருவகைப்படுத்தோதுங்கால், இவரல்லாத ஏனைப் பதினெண் குடிமக்களையும் ஒரு தொகைப் படுத்து ஐந்தாம் வகுப்பாக்கி, அவர் தம்மை 'இழிந்தோர்' எனவும் 'கீழோர்' எனவும் ஆசிரியன் கூறுவன்; அவ்வாறு வேளாளரை இருவகைப் படுத்தாது ஒன்றாக்கி ஒரு வகுப்பினராகக் கூறும் வழி அவ்வேளாளர் தம்மை ‘ஏனோர்' எனவும் ‘பின்னோர்' எனவுங் கூறுவன். ஓதுதற்றொழில் அந்தணர் ஒருவர்க்கே சிறந்த தாயினும், அஃது ஏனை அரசர் வணிகர் வேளாளர் என்னும் ஒவ்வொரு சிறப்புத் தொழில் உடையார்க்குந், தனித்தனிக் கைத்தொழில்களுடைய ஏனைப் பதினெண் வகுப்பார்க்கும் ய பொதுவகையில் உரித்தென்று ஓதுகின்றுழி, அந்தணரல்லாத அவ்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/245&oldid=1591924" இலிருந்து மீள்விக்கப்பட்டது