உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேளாளர் நாகரிகம்

221

வேனையோரை நான்கு வகுப்பாக்கி, அவ் வந்தணரை ஒரு வகுப்பாக்கி "மேலோர் முறைமை நால்வருக்கும் உரித்தே” என்று ஆசிரியன் தன் கருத்தை இனிது புலப்படுத் துரைத்தல் காண்க; இச் சூத்திரத்தில் 'மேலோர் முறைமை' என்றது அந்தணர்க்குச் சிறப்பாகவுரிய 'நூல் ஓதுந்தொழில்; நால்வர்க்கும் உரித்து' என்றது அவ்வோதுதற்றொழில்; அஃது ஏனைத்தொழில்களிற் றனித்தனிச் சிறந்தாராகிய அரசர் வணிகர் வேளாளர் இவரல்லாத ஏனைப் பதினெண்மர் என்னும் நால்வகை யார்க்கும் பொதுப்பட உரியதாகும் என்றபடியாம். இனி, அந்தணரை வேறு பிரியாமல் அவரையும் அகப்படுத்து, வணிகரையும் வேளாளரையும் ஒருவகுப்பாக்கி யுரைக்கும்வழி, அந்தணர் அரசர் வேளாளர் என்னும் மூவரையும் 'மேலோர்' ‘மேலோர்' எனவும், அவரல்லாத ஏனைப் பதினெண்மரையுங் ‘கீழோர்' எனவும் ஆசிரியன் ஓதுவன்; அது, “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே'

என்னுந் தொல்காப்பியக் கற்பியற் சூத்திரத்தால் நன்கு தெளிப்படும். இச் சூத்திரப் பொருள் 'மேலோராகிய அந்தணர் அரசர் வேளாளராகிய மூவர்க்குங் கூட்டிச் சொல்லிய வேள்விச்சடங்கு, ஏனைக் கீழோராகிய பதினெண் வகுப்பார்க்கும் உரித்தான காலமும் உண்டு' என்பதாம்.

கால்

ங்ஙனம் ஒருகால் நால்வகுப்பினராகவும், பிறிதொரு ஐவகுப்பினராகவும் பகுத்து உயர்ந்தோராகவும்

இழிந்தோராகவும் மருதநிலத்திற்கு

ஆசிரியனாற் கூறப்பட்ட மக்கள் உரியராவர். வயலும் வயல்சார்ந்த இ இடமுமாகிய மருதநிலமே மக்கள் உழவு தொழிலாற் சிறந்து நாகரிகமுற்று வாழ்தற்கு உதவி செய்வதாகலின், அந் நிலத்தாற் பெருகிய மக்களையே ஆசிரியன் மேலோரெனவுங் கீழோரெனவும் வகுத்து அவ்வவர்க்குரிய தொழில் வேறுபாடுகளை எடுத்து மொழிந்து நூலருளிச் செய்தான். அரசனது அரண்மனை மருத நிலத்தின்கண்ணேதான் உளதென்பது உழிஞை தானே மருதத்துப் புறனே" எனவும், "முழுமுதலரணம் முற்றலுங் கோடலும், அனைநெறி மரபிற் றாகுமென்ப” எனவும் ஆசிரியன் புறத்திணையியலிற் கூறிய சூத்திரங்களான் அறியப்படும்.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/246&oldid=1591926" இலிருந்து மீள்விக்கப்பட்டது