உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

227

யல்லாமற் பிறிதில்லை யென்பது அவர்களது வாய்மொழி யினாலேயே நன்கு புலப்படுகின்றது.

அற்றேல், விருந்தோம்பும் நல்லறத்திற் சிறந்த பண்டைத் தமிழ் வேளாளர் மிடிப்பட்டு வருந்தி வந்த ஆரியரை வருத்தியது என்னையெனிற் கூறுதும். பண்டை நாளிலிருந்தே ஆரியர் முழுமுதற் கடவுளின் உண்மையை உணர்ந்தவர் அல்லர்; அதனை யுணராமையின் தாம் அம் முதற்பொருளை வழிபடு மாறும் உணராராயினர். தமக்காகத் தம் பகைவரோடு போர் இயற்றவும், மழைபெய்வித்துத் தமக்கு உணவுப் பண்டங்களை விளைவித்துத் தரவும் வல்லனவாகத் தம்மாற் கருதப்பட்ட இந்திரன் மித்திரன் வருணன் மருத்துக்கள் முதலான சிறு தெய்வங்களையே பெரிதும் வேண்டி வணங்கிவந்தனர். சோமப்பூண்டின் சாற்றினாற் சமைத்த களிப்பான பானகத்தை அத் தெய்வங்களுக்குப் பருகக் கொடுத்தலானும், யாடு, மாடு, குதிரை முதலிய விலங்கினங்களை வெட்டி அவற்றின் இறைச்சியை அவை தமக்கு உணவாகக் கொடுத்துத் தாமும் உண்டாலானும் தாம் இந் நிலவுலகத்திற் பெறவேண்டிய எல்லாச் செல்வங்களையும் பிழையாமல் எளிதிற் பெறலாம் என்று நம்பி வந்தார்கள். இந்நம்பிகையாற் சோமபானத்தையும் விலங்கின் இறைச்சியையும் அவியாகக் கொடுக்கும் பொருட்டு அளவிறந்த வேள்விகளையும் வேள்விச் சடங்குகளையும் நாடோறும் பெருக்கி வந்தனர். அதற்கு இருக்கு வேதத்தின் ஐந்தாம் மண்டிலத்தின் கண் உள்ள,

66

"ஓ! பிராமணர்களே” மருத்துக்களே, யான் கருத்தாய்ப் பிழிந்த இந்தச் சோமபானத்தை இந்திரன் பருகட்டும்;

ஏ னென்றால் இந்தக் காணிக்கையானது ஆடவனுக்கு ஆடுமாடுகளைத் தேடித் தந்தது; இந்திரன் அதனைப் பருகிய பின் அவ் அரவினைக் கொன்றான்.

ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு உதவி செய்தல் போல அக்கினியானவன் அவன் வேண்டிய படியே முந்நூறு எருமை மாடுகளை விரைந்து பாகம் பண்ணிக் கொடுத்தான்.

இந்திரனும், விருத்திரனைக் கொல்லுதற்கு ஆடவனது காணிக்கையாக, நெருக்கிப் பிழிந்த மூன்று பெரிய தொட்டிச் சோமபானத்தை உடனே குடித்து விட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/252&oldid=1591938" இலிருந்து மீள்விக்கப்பட்டது