உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

19. ஆரியர் தம்மை உயர்த்தச் செய்த சூழ்ச்சி

இதன்பின், எல்லாவாற்றானுந் தமிழ்மக்களுந் தமிழரசருஞ் சிறந்தாராயும் நிகரற்ற வலிமையுடையாராயும் இருத்தல் கண்டு, ஆரியர் அவரை நேரே எதிர்த்தலும் இகழ்தலுஞ் செய்தலை விட்டு, அவரோடு அளவளாவி அவர்தம் வழக்க. வொழுக்கங் களைக் கைப்பற்றுவார்போற் புறத்தே காட்டி, அகத்தே அவரைத் தாழ்த்தித் தம்மை உயர்த்துதற்கு வேண்டுஞ் சூழ்ச்சிகளெல்லாம் மிகவுங் கருத்தாய்ச் செய்து வருவதில் முயற்சியுடையரானார். அக் கருத்து நிரம்புதற்கு முதலில் ஊன் உணவையும் வெறியாட்டு வேள்விகளையும் அறவே ஒழித்தனர். அதன்பின், தம்மை எல்லாரினும் உயர்ந்த பிராமணர் எனவும், ஆரியரல்லாத தமிழரைச் சத்திரியர், வைசியர், சூத்திரர் எனவும் பிரித்து, இவ்வேற்பாடு கடவுளால் வகுக்கப்பட்டதென எழுதி, மெல்ல மெல்ல வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள் முதலியவற்றின்கண் அவ் வெழுத்தை நுழைத்துவிடுவாராயினர்.

ம்

களங்கமில்லா உள்ளத்தினரான தமிழர் அவ்வாறு அவர் நுழைத்த அவ்வேற்பாட்டினை உண்மையென நம்பத்தலைப் பட்டபின், அதனை மேலும் மேலும் வலியுறுத்தி விரித்து மநு முதலான மிருதிநூல்களை எழுதிவைக்கலாயினர். இம் மிருதிநூல்கள் வழங்கத் துவங்கிட தமது கருத்து எளிதாய் எங்கும் நிறைவேறுதலைக் கண்டபின், ஆரியர் தம்மைப் பிராமணர் எனவும், ஆரியரல்லாத தமிழரைச் சத்திரிய வைசிய சூத்திரரெனவும் வகுத்த நால்வேறு வகுப்பையுங்கூட ஒழித்துத் தமிழர் எல்லாரையும் ஒருங்கு சேர்த்துச் சூத்திரரென முற்றும் இகழ்வாகவே வழங்குவதற்குந் துணிந்து, 'கலிகாலத்தில்’ சத்திரிய வைசிய வகுப்பில்லை, பிராமணர் அல்லாத அனைவருஞ் சூத்திரரே ஆவர்' என ஒரு கதை புனைந்துகட்டி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/287&oldid=1592008" இலிருந்து மீள்விக்கப்பட்டது