உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

269

66

"இன்மையார் சென்றிரந் தார்க்கு

இல்லையென்னாது ஈந்துவக்குந்

தன்மையார்’

என்பதும் அவ் வேளாளரையே குறிப்பதால் சிறுமகாரானும் உணரற்பாலதேயாம். அற்றேல், இத்துணை எளிதில் உணரக்கிடப்பதாகிய இத் த் தேவாரப் பதிகப் பெருளை ஆய்ந்துணராமல் ஆசிரியர் சேக்கிழார் அதனை ‘வேதியர்’ மேல் ஏற்றியது என்னை யெனின்; 'வேதியர்' என்னும் சொல்லைக் கேட்ட அளவானே, இக்காலத்துப் போலிச் சொல் வழக்கைக் கொண்டு அக்காலத்து வழங்கிய அதற்கு ஆரியப் பார்ப்பனர் என்று பொருள் கோடல் சிறிதும் பொருந்தாது; ‘வேதங்கள்’ என்பன ஆரியவேதங்களே என்று கோடலும் பொருந்தாது.

அடிக்குறிப்பு

1. மநுமிருதி நூல், 8 ஆம் அத்தியாயம், 415, 417

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/294&oldid=1592022" இலிருந்து மீள்விக்கப்பட்டது