உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 29.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

271

ஆரிய வேதங்களோ இவ்வாறு அறம் பொருளின்ப வீடுகளை உணர்த்துவன வென்றாதல், அவை சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டன வென்றாதல், பழைய ஆரிய நூல்களுள் யாண்டுஞ் சொல்லப்படவில்லை. ஆரிய வேதங்களின் பிறப்பைப் பற்றிக் கூறும் பழைய ஆரியநூற் கூற்றுகளும் ஒன்றோடொன் ான்று பெரிதும் மாறுபட்டு நிற்கின்றன; அம் மாறுபாடுகளுட் சில ஈண்டெடுத்துக் காட்டுதும். “இருக்கு சாமம், எசுர் என்பவற்றின் செய்யுட்கள் புருஷனைப் பலியாக வேட்ட வேள்வியினின்று பிறந்தன" என்று இருக்குவேதத்துப் ‘புருஷசூக்தம்' (10 - 90) மொழிகின்றது. இனி, “ஸ்கம்பம் என்னும் நிலைக்களப் பொருளிலிருந்து இருக்குமொழிகள் வெட்டியெடுக்கப் பட்டன. எசுர் மொழிகள் பிறாண்டியெடுக்கப்பட்டன; அப் பொருளின் மயிர்களே சாமப் பாட்டுகள்; அதர்வ ஆங்கீரசப் பாக்கள் அதன்வாய்" (10, 7, 20) என்றும் “இருக்கு மொழி யிந்திரனினின்று பிறந்தது, இந்திரன் ருக்கினின்றும் பிறந்தனன்" (13, 4, 38) என்றும் “வேதங்கள் காலத்திலிருந் துண்டாயின” (19, 54, 3) என்றும், “வேள்விக்குப் பின் எஞ்சிய எச்சிலிருந்து இருக்கு சாமப் பாக்களும், பாவகைகளும், புராணங்களோடு எசுரும், வானில் உறையும் எல்லாத் தேவர்களும் உண்டாயினர்” (10, 7, 24) என்றும் அதர்வவேதம் நுவல்கின்றது. "வேதங்கள் அக்நி வாயு சூரியன் என்னும் மூன்றிற் றோன்றின” எனச் சாந்தோக்கிய உபநிடதம் புகல்கின்றது.

“ஈரவிறகில் உண்டாக்கின தீயிலிருந்து புகையின் பல வேறு திரிபுகளும் உண்டாதல்போல, இந்தப் பெரிய பொருளின் உயிர்ப்பிலிருந்து இருக்குவேத எசுர்வேத சாமவேதங்களும், அதர்வாங்கிரசுகளும், உபநிடதங்கள் சுலோகங்கள் சூத்திரங்கள் பல்வேறுரைகளம் உண்டாயின" (14, 3, 4, 10) என்று சதருத பிராமணம் புகல்கின்றது. "வேதங்கள் பிரஜாபதியின் தாடி மயிர்கள்” (3,39,1) என்று தைத்திரீய பிராமணங் கூறுகின்றது.

இதிகாசபுராணவித்தைகளும்,

ஆரிய நூல்கள்

வ்வாறு ஆரியவேதங்களின் பிறப்பைப் பற்றிப் பழைய ஒன்றோடொன்று மாறுபட மொழிதல் போலவே, பின்றைக் காலத்து வடமொழி நூல்களும் அவற்றின் பிறப்பைப் பலவேறுபடக் கிளந்து மாறுபட்டு நிற்கின்றன. அம் மாறுபாட்டுரைகளுள்ளுஞ் சில இங்கெடுத்துக் காட்டுதும்:

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/296&oldid=1592026" இலிருந்து மீள்விக்கப்பட்டது