உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

5

வாழ்க்கையின் தொடக்கமும் இடையும் இறுதியும் எல்லாம் காதலின் செயல்களே.

‘தளராத என்காதல், குளோரிஸ், இனி உன்மீது

வளராது, என்காத லாணைகள் மீதாணை!' என்றான்; 'தளராத காதல் தளர்ந்த தென்ன மாற்ற மென்றாள்;

"

‘தளரவில்லை அதுஇன்று முழுநிறைவு பெற்ற’ தென்றான்.

லாஃவந்தேன்

முழுநிறை மணவாழ்வு என்பது வாழ்க்கை நடுவேயுள்ள ஒரு வீட்டு விளக்கு; வாழ்க்கை அதனைச் சூழ்ந்த ஒரு வான விளிம்பகம்.

இளவரசி அந்தாயின் பிபேஸ்கொ

மணவாழ்வு என்பது ஒரு வகையில் வாழ்க்கையைப் போன்றதே - அது ஒரு போர்க்களம், மலர்ப் படுக்கையன்று.

ஆர். எல். ஸ்டீவென்ஸன்

மனிதன் அவாக்களின் முடிந்த முடிவு இல்வாழ்வின் ன்பம் பெறுதலே.

திருமணம் என்பது ஓர் உணர்ச்சிக் காப்புறுதி. மணமறுப்பு அதன் தளர்ச்சிப்பாடு.

ரஸ்ஸல் கிரீன்

மணவினையுட் புகாதவர் புக விரும்புகின்றனர்; புகுந்தவர் வெளியேற விரும்புகின்றனர். அப்படியானால், திருமணம் கேள்வி எழுப்பி ஆராய்வதற்குரிய செய்தி அல்லவா?

66

எமர்சன்

“ஒன்று என் வீட்டில் நான் ஆட்சித் தலைவனாயிருப்பேன்; இல்லாவிட்டால் அதன் காரணம் அறிவேன்", என்கிறான் ஆடவன், மணவினைக்கு முன்பு! மணவினைக்குப் பின்பு, அவன் அக் காரணத்தைத்தான் அறிகிறான்.

ஒரு பெரியார்

மணவினைக்கு நீ ஒத்துக் கொள்கிறாயா என்றபோது ஆடவன், “ஆம்; நான் அதனை ஒத்துக்கொண்டாய் விட்டது. ஆனால் அது என்னை ஒத்துக்கொள்ளவில்லை” என்றான்.

கிளாரென்ஸ் வான்செஸ்டர்