உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

7. அறிவுநூல்

ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவே அறிவுநூல்.

13

ஹெர்பெர்ட் ஸ்பென்ஸர்

அறிவியல் மெல்ல

அடிமேலடியாக முன்னேறுகிறது.

மல்ல

முன்னேறுகிறது;

ஸ்டியூவர்ட் சேஸ்

ஒரு அறிவியல் துறையில் துறைபோன வல்லுநர் ஆனவர்கள் வரவர இன்றியமையா நிலையில் பிற துறைகளில் மிகப் பொது நிலை அறிவுடையவராய் வருகின்றனர். தன் துறை முற்றிலும் ஆண்டறிய அவன் முழு அறிவாற்றலும் தேவைப் படுகிறது.

கெரால்டு ஹேர்டு

இன்றைய குடியுரிமையாளன் ஓர் அறிவியல் துறை வல்லுநனாயிருக்க முடியாதிருக்கலாம்- ஆனால் பொதுநிலை அறிவாளியாக, அதன் பொது முன்னேற்றத்தைக் கவனிப்ப வனாக இருக்க முடியும்; இருந்தாக வேண்டும்.

கெரால்டு ஹேர்டு

செய்பொருட் படைப்புக் கலையில் நம்மை விஞ்சிய ஊழிகள் உண்டு; உயர் குறிக்கோட்பற்றில் நம்மினும் உயர்வுற்ற ஊழிகள் உண்டு; நம்மினும் வீறுமிக்க, ஒழுங்கமைந்த சட்ட திட்டங்களுடைய ஊழிகள் இருந்ததுண்டு. ஆனால் நம் அறிவியலை எவரும் அணுகியது கிடையாது.

கெரால்டு ஹேர்டு

கலை யென்பது 'நான்'; அறிவுநூல் என்பது 'நாம்'!

கிளாட் பெர்னார்டு

அறிவுநூலின் ஒவ்வொரு முன்னேற்றப் படியும், ஒரு

மனிதன் கற்பனைத் துணிவினின்றே தோன்றியுள்ளது.

ஜான் டியூயி