உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

-

27

வேற்றுமையுற்ற குடும்பம் நில்லாது பாதி அடிமைப் பண்பும், பாதி சுதந்தர மக்களையும் உடைய எந்த அரசாங்கமும் நிலைக்க முடியாது.

லிங்கன்.

அவ்வந்நாட்டின் தகுதிக்கேற்ற அரசாங்கம் அததற்குக்

கிடைக்கிறது.

ஜோஸஃவ் டி. மேய்ஸ்டர்.

அரசாங்கம் இருப்பது சிறுபான்மையினரின் உரிமை களைப் பாதுகாக்கவே. எல்லாரும் விரும்புபவர்களுக்கும் பணக்காரர் களுக்கும் பாதுகாப்பு தேவையில்லை - அவர்களுக்கு நண்பர் பலர், பகைவர் குறைவு.

வென்டெல் ஃவிலிப்ஸ்.

மிகத் தாழ்ந்த தொழிலைக்கூட அதற்கென்று பயிற்சி யில்லாமல் எவரும் மேற்கொள்வதில்லை. ஆனால், தொழில் களுள் மிகக் கடினமான பிறரை ஆளும் தொழிலுக்கு மட்டும், எவர் வேண்டுமானாலும் தகுதியுடையவர் என்று முன்வந்து விடுகி றார்கள்.

சாக்ரட்டீஸ்.

நம் அரசாங்க அமைப்பின் அடிப்படையையே மாற்றிய மைக்கும் உரிமை நம் மக்களுக்கு உண்டு, என்ற அடிப்படை யிலேயே நம் அரசியலமைப்பு அமைந்துள்ளது.

வாஷிங்டன்.

என் மனம் போல நான் செயலாற்ற முடியுமட்டும் என் குடிமக்கள் எவரும் தம் விருப்பப்படி சிந்தனையாற்றலாம்.

பேராளன் ஃவிரெடரிக்

அரசியல் முறை எதுவாயிருந்தாலும் (வல்லாட்சியாளர்) கொடுங்கோன்மையை எதிர்த்து நின்று மக்களைக் காக்க மனித உள்ளத்திலேயே ஓர் இயற்கைப் பண்பு இருக்கிறது.

அறிஞர் ஜான்ஸன்.