உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

29

மக்களை, மக்களே, மக்கள் நலத்துக்காக ஆள்வதென்பது தான் குடியாட்சி.

ஏபிரகாம் லிங்கன்.

குடியாட்சியின் தீங்குகளுக்கு மருந்து இன்னும் மிகுதியான குடியாட்சி உரிமைகளே ஆகும்.

ஆல்ஃபிரட் ஸ்மித்.

எனக்குக் குடியாட்சியில் உறுதியான பற்று உண்டு; னனில் அதுவே ஒவ்வொரு மனிதனின் உள்ளார்ந்த ஆற்றலையும் வெளிப் படுத்த வல்லது.

உட்ரோ வில்ஸன்.

குடியாட்சி என்றால், மக்களை, மக்களுக்கா மக்களைக் கொண்டு தடியடிகளால் அடித்தடக்குவது என்று பொருள்!

ஆஸ்கார் வைல்டு.

குடியாட்சி என்பது ஒரு கல்லறை போன்றது; அது வாங்கு வதை என்றும் மீட்டுத் தருவதில்லை!

எட்வர்டு புல்லேர் லிட்டன் பெருமகனார்.

ஒரு சிறு தன்னல இலஞ்சக்குழுவினால் ஆட்சியாளர் அமர்த்தப் பெறும் பழைய முறைக்கு மாறாக, திறமையற்ற ஒரு பெரும்பான்மைக் கூட்டம் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் புதிய முறையே குடியாட்சி எனப்படுகிறது!

பெர்னார்டு ஷா.

குடியாட்சியில் அமைப்பொழுங்கும் கட்டுப்பாடும் இருக்க வேண்டியதே. ஆனால் அதன் உயிர்நிலை தனிமனிதன் சுதந்திரமே யாகும்.

சார்லஸ் எலன்ஸ் ஹியூஸ்.

19. சரிநிகர் நெறி

நம் துன்பங்களனைத்தையும் ஒருங்கே திரட்டிச் சரிநிகராகப் பங்கு வைத்து, ஆளுக்கு ஒரு பங்கு கொண்டு செல்க