உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

26. மருத்துவர்

அப்பாத்துரையம் - 41

திருவாளர் உணவு, திருவாளர் ஓய்வு, திருவாளர் மகிழ்ச்சி ஆகிய மூவருமே தலைசிறந்த பண்புடைய மருத்துவர் ஆவர். ஸிட்னி ஸ்மித்.

நல்ல மருத்துவர் கழுகின் கட்புலனும், அரிமாவின் மன உரமும் ஒரு நங்கையின் மென்கரமும் உடையவராயிருத்தல் வேண்டும்.

ஸர்ஃவிலிங் சிட்னி.

மருத்துவன் குணப்படுத்துகிறான்; இயற்கை குணம்

காண்கிறது.

அரிஸ்டாட்டில்.

இயற்கை, காலம், பொறுமை இம்மூன்றும் மூன்று தலை சிறந்த மருத்துவர் என்னலாம்.

எச். ஜி. போன்.

ஒரு நாள் ஒரு பழம் உண்க; ஒரு நாளும் மருத்துவரை நாட வேண்டி வராது.

ஆங்கிலப் பழமொழி.

மருத்துவர் செய்யும் நன்மையைவிட இயற்கை செய்யும்

நன்மை மிகுதி.

ஆலிவெர் கிராம்வெல்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.

திருவள்ளுவர்.

மருத்துவனின் மிகச் சிறந்த அறிவு ஊகமே. பெரும்பாலாக அவர்கள் கருத்துக்கள் போலிக் கருத்துக்கள். அவர்கள் வெற்றி, நோயாளியின் விருப்பங்களையறிந்து அவர்கள் நடப்பதைப் பொறுத்ததே. இதனால் அவர்கட்கு ஆதாயமும் உண்டாகிறது.

ஸர் ஜான் பிராம்ப்டன்.