உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

31. ஒழுக்கம்

ஒழுக்கம் விழுப்பந் தரலான், ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

அப்பாத்துரையம் - 41

திருவள்ளுவர்.

சமய வகைகள் பல; ஏனெனில் அவை மனிதனால் ஆக்கப்பெற்றன. ஒழுக்கம் எங்கும் ஒரே நிலைப்பட்டது; ஏனெனில் அது கடவுளுக் குரியது.

வால்ட்டேர்.

ஒழுக்கத்தால் மட்டும் ஒருவன் சமயப் பற்றாளனாக முடியாதிருக் கலாம். ஆனால் ஒழுக்கமில்லாமல் ஒருவன் சமயப் பற்றாளனா யிருக்க முடியாது.

கலைமகன் வில்ஸன்.

மக்கள் எதில் ஈடுபட்டுப் பெருமை கொள்கிறார்களோ, அதுவே அவர்கள் கோட்பாடும், அவர்கள் ஒழுக்கமும் ஆகும். ஜே. மார்ட்டினோ. அறிவுத்திறத்தில் கடைசி எண்ணமே தலைசிறந்த எண்ணம்; ஒழுக்கத்துறையிலோ முதல் எண்ணமே தலைசிறந்தது. ராபர்ட் ஹால்.

சமயப்பற்றற்ற ஒழுக்கம் வேரில்லாமரம்; ஊற்றுக் கசிவில்லாத ஓர் ஓடை; அது மணல்மீதமைந்த மனை. மழையில்லாத போது அது வாழ்வதற்கெளிதாம். ஆனால் புயல் வந்தால் தங்காது.

பெர்னார்டு ஷா.

ஆழ்ந்த ஒழுக்க உணர்வில்லாவிட்டால், உயர்நடை ஒழுங்கு இருக்க முடியாது.

எமெர்ஸன்.