உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

61

பிழையும் பீழையும் நேர்ந்தபோது நட்பின் சிறப்பு ரிமையைப் பயன்படுத்தி ஒறுத்துத் திருத்தத் தயங்குபவர் போலி நண்பர்.

நகுதற் பொருட்டன்று நட்பு; மிகுதிக்கண்

பேக்கன்.

மேற்சென் றிடித்தற் பொருட்டு.

திருவள்ளுவர்.

அறிவுத் திறமுடைய நண்பர்களைப்போல வாழ்வின் நல்ல புகழ்த்திரு வேறில்லை.

யூரிப்பிடிஸ்.

இன்பத்தில் நாடுவதை விடத் துன்பத்தில் நண்பனை விரைந்து நாடிச் செல்லுக.

சிலோ.

மென்மையான உணர்ச்சி யியல்புடைய இளமையிலேயே பெரும்பாலாக நட்பு ஏற்படுகிறது. ஆண்டு முதிர்ந்தபின் ஏற்படும் நட்பு அஃது, உரத்திலும் குறைவுடையது. அது நீடித்து வேர்க்கொள்ளுதல் முடியாது.

ஃவிட்ஸ் ஆஸ்பேர்ண்.

மாலை நிழல் போன்றது நட்பு. வாழ்க்கையாகிய

ஞாயிறு படியுந்தோறும் அது நீட்சியுறுகிறது.

லாஃவரதேன்.

தீயோர் நட்பு, காலை நிழல் போன்றது, அது வாழ்க்கை முன்னேற முன்னேறக் குறுகும் தன்மையுடையது. நல்லோர் நட்பு, மாலை நிழல் போன்றது.

நிறைநீர நீரவர் கேண்மை; பிறைமதிப்

பின்நீர பேதையார் நட்பு.

ஹொடர்

திருவள்ளுவர்.

உண்மை நட்பு மிகப் படிப்படியாக வளர்வது; இரு

சார்பிலும் தகுதியிருந்தால் மட்டுமே அதுபற்றியிணைத்து

வளரும் தன்மையது.

செஸ்டர்ஃவீல்டு.